“புக்கிட் கெப்போங் அம்னோ காட்டும் மலாய்-எதிரணி-சீனர்கள் என்னும் வாதத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மாட் சாபு அந்த விஷயத்தை தலைகீழாக மாற்றி- அந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு மலாய்க்காரர் என்கிறார்.”
எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் நீங்கள் சொல்வதை ஒட்டுக் கேட்கலாம்
கறுப்பு மம்பா: நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாடு 1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி சுதந்தரம் அடைவதற்கு முன்பு புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது நாடு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த நிர்வாகத்துக்காக வேலை செய்த அனைவரும் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து அரசியாரின் சம்பளப் பட்டியலில் இருந்தனர்.
ஆகவே அப்போது பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளை எதிர்த்து சண்டையிட்டவர்கள் அனைவரும்- அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்- தேசியவாதிகள். இன வேறுபாடின்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை செய்த அனைவரும் அந்த காலனித்துவ எஜமானர்களுக்காகப் பணி புரிந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தேசியவாதிகளான முகமட் இந்ராவும் அவரது தோழர்களும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களை வெற்றிகரமாக விரட்டியிருந்தால் சீனாவில் கோமிந்தாங்கை விரட்டிய கம்யூனிஸ்ட்களைப் போன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்திருந்த வியட்னாமிய இராணுவத்தை துரத்திய கம்யூனிஸ்ட்களைப் போன்றும் வீரர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பர்.
ஆனால் வெற்றி பெற்றவர்கள் தங்கள் சொந்த வரலாற்றுப் பதிப்பை வெளியிடுவதுதான் வழக்கம்.
ஒரே மலேசியாகுகு: அப்போதைய மலாயாவில் கம்யூனிஸ்ட்கள்தான் உண்மையான வீரர்கள். அவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களை அடுத்து ஜப்பானியர்களை பின்னர் மீண்டும் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினர். மலாயாவுக்கு ‘சுதந்தரத்தை’ பெற்றுத் தந்தனர். அவர்களே நாட்டுப் பற்றுடையவர்கள்.
உள்ளூர் போலீசாரும் வீரர்களும் வெறும் பீரங்கிக் குண்டுகளே. அவர்களை பிரிட்டிஷாரும் ஆளும் வர்க்கமும் அதன் எடுபிடியான மசீச-வும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வேலைக்கு அமர்த்தியிருந்தன.
கம்யூனிஸ்ட்களுக்கு வேறு வழி இல்லை- ஒன்று தாக்க வேண்டும். இல்லை என்றால் தாக்குதலுக்கு இலக்காக வேண்டும்.
இன்றும் அதே கதைதான். பிஎன் ஆட்சியாளர்கள் தங்களது சுயநலனுக்காக மக்கள் எழுச்சியை ஒடுக்கவும் மிரட்டவும் போலீசாரைப் பயன்படுத்துகின்றனர்.
உண்மையை வெளிப்படுத்திய மாட் சாபு-வுக்கு என் வணக்கங்கள். தொழில் நுட்ப ரீதியில் அவர் சொல்வது மிகவும் சரியாகும். ஒரு வேளை அரசியல் ரீதியில் தவறாக இருக்கலாம் (தவறான நேரத்தில் அந்த விஷயத்தை அவர் எழுப்பி விட்டார்) கர்பால் சிங்கைப் பொறுத்த வரையில் அவர் சில சமயங்களில் எதுவும் பேசாமல் இருப்பது நல்லது.
அடையாளம் இல்லாதவன்_05: மூத்த, பிரபலமான வழக்குரைஞர் என்னும் முறையில் கர்பால் சிங், ஜனநாயகத்தில் எந்த விஷயம் மீதும் பேச்சு சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் மீது தமது கருத்தைத் திணிப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
ஐவிடி: கம்யூனிஸ்ட்களுக்கு உதவ மறுத்ததால் பல சீன மலேசியர்கள் குறிப்பாக அரசாங்கத்தில் வேலை செய்த பலர், கம்யூனிஸ்ட்களின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நம்பாதவன்: அம்னோவின் இனவாதப் பார்வையில் நமது வரலாறு எழுதப்பட்டுள்ளது. புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் பிரிட்டிஷ்காரர்களாக இருந்தால் தாக்குதல் நடத்தியவர்கள் வீரர்களாக கொண்டாடப்பட்டிருப்பார்கள். பேராக்கில் பிரிட்டிஷ் ரெசிடெண்ட் ஜே டபிள்யூ டபிள்யூ பேர்ச்சை கொன்ற உள்ளூர் மலாய்த் தலைவருமான மகராஜாலேலா நமது வரலாற்றில் வீராகப் போற்றப்படுகிறார்.
ஆனால் புக்கிட் கெப்போங் அம்னோ காட்டும் மலாய்-எதிரணி-சீனர்கள் என்னும் வாதத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மாட் சாபு அந்த விஷயத்தை தலைகீழாக மாற்றி- அந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு மலாய்க்காரர் என்கிறார்.