அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புகிறது, மன்மோகன் சிங்

ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள சிறிலங்கா மீதான தீர்மானம் இந்தியாவின் குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்குமானால் இந்தியா அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறது.

“சமத்துவம், உண்மையான மதிப்பு, நீதி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சிறீலங்கா தமிழ் சமூகத்தின் எதிர்காலம் அமைய வேண்டும் என்ற நமது குறிக்கோள்களை அத்தீர்மானம் உள்ளடக்கமாகக் கொண்டிருக்குமானால், நாம் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பம் கொண்டுள்ளோம்”, என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று (மார்ச் 19) இந்திய நாடாளுமன்றத்தில் கூறினார்.

அத்தீர்மானத்தின் இறுதி வரைவின் வாசகம் கிடைத்ததும் அதனை இந்தியா ஆய்வு செய்யும் என்று அவர் கூறினார்.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள அத்தீர்மானம் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் இவ்வார இறுதியில் வாக்களிப்புக்கு விடப்படும்.

-BBC