லினாஸ் தொழில் கூடம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ‘நிலை முரண்படுவதற்கு’ பக்காத்தான் ராக்யாட் அதனைப் புறக்கணித்துள்ளதே காரணம் என்று டிஏபி கூறுகிறது.
பொது மக்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தத் திட்டத்தை நிறுத்துவதில் நஜிப் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
“லினாஸ் விவகாரம் சர்ச்சைக்குரிய அரிய மண் தொழில் கூடத்தின் தலை விதியை நிர்ணயிக்காது” என நஜிப் சொன்னதாக மார்ச் 17ம் தேதி பெர்னாமா தகவல் வெளியிட்டதை லிம் சுட்டிக் காட்டினார்.
“நஜிப் அந்தப் பல்லவியை மாற்றிக் கொண்டு பிஎஸ்சி நாடாளுமன்றத் தேர்வுக் குழு நாம் முடிவு செய்வதற்கு வலுவான அடிப்படியை வழங்கும்” என இப்போது கூறுவது அவருடைய மார்ச் 17ம் தேதி கூற்றிலிருந்து மாறுபட்டதாகும்.”
“அந்த மாற்றத்துக்கு பிஎஸ்சி-யை பக்காத்தான் புறக்கணித்தே காரணம் என்பது தெளிந்த உண்மையாகும்.”
ஆனால் அத்தகைய முரண்பாடுகள், லினாஸ் தொழில் கூடம் பொது மக்களுடைய ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்கும் மருட்டலை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள வேளையில் லினாஸை மூடுவதில் பிரதமர் உண்மையிலேயே தீவிரமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது,” என பாகான் எம்பி-யுமான லிம் கூறினார்.