கைரி: மாட் சாபு என்னுடன் விவாதம் நடத்த அஞ்சுகிறார்

புக்கிட் கெப்போங் விவகாரம் மீது தம்முடன் விவாதம் நடத்துவதை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு நிராகரித்ததைத் தொடர்ந்து தாம் தார்மீக வெற்றியை அடைந்துள்ளதாக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாக்லுதின் கூறிக் கொண்டுள்ளார்.

டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கைரி, மாட் சாபுவை கடுமையாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

தாம் அந்த விவாதத்திற்கு பொருத்தாமான வேட்பாளர் அல்ல என அவர் சொல்லியிருப்பது அவருடைய “கோழைத்தனத்தை” காட்டுவதாகவும் கைரி சொன்னார்.

மாட் சாபுவுக்கு எதிராக விவாதம் நடத்த பாஸ் கிளந்தான் அரசாங்கம் விடுத்த அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவர் அதற்கு அஞ்சி ஒடி விட்டார். வரலாற்றை திரிக்க முயல வேண்டாம்.”

“ஒன்று மட்டும் நிச்சயம். நேர்மை இல்லாத கோழையான துணைத் தலைவர் ஒருவரை தேர்வு செய்துள்ளது என நான் இப்போது உணருகிறேன். தாம் தவறு செய்துள்ளதால் அவர் அஞ்சுகிறார்.”‘

சண்டை தொடங்குவதற்கு முன்னரே அவர் தோல்வி அடைந்து விட்டார்.”

தாம் அழைப்பை நிராகரிக்கவில்லை என்றும் ஒர் இளைஞர் பிரிவுத் தலைவருடன் விவாதம் நடத்துவது தமக்கு பொருத்தமாக இருக்காது எனக் கருதியதால் பாஸ் இளைஞர் பிரிவிடம் அந்த பொறுப்பை ஒப்படைப்பதாக மாட் சாபு இன்று காலை மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.

அது குறித்து கைரி கருத்துரைத்தார்.

TAGS: