“நாம் ஜோடிக்கப்பட்ட நம்பிக்கைகளிலும் பொய்களிலும் வாழ விரும்பவில்லை. வரலாற்று உண்மைகளை நம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
மாட் சாபு சொல்வது உண்மையென ஜோகூர் அரசாங்கப் புத்தகம் மெய்பிக்கிறது
பேஸ்: கடந்த 50 ஆண்டுகளாக நமது வரலாற்றுப் புத்தகங்களில் காணப்படுகின்ற பொய்களை சரி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. அது அம்னோ பங்கை குறைக்குமானால் அப்படியே இருக்கட்டுமே. நமது உண்மையான வரலாற்றையும் சுதந்திரப் போராட்டத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் தொகுக்க வேண்டும்.
மலாயாவும் மலேசியாவும் சுதந்திரமடையப் போராடிய பலருக்கு நாம் நியாமாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்துக்கு அவை எடுத்துக்காட்டாக இருக்கும்.
நாம் ஜோடிக்கப்பட்ட நம்பிக்கைகளிலும் பொய்களிலும் வாழ விரும்பவில்லை. வரலாற்று உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பிராமண்: “வெற்றி பெற்றவனுக்கே எல்லாம் சொந்தம்” என்பது முதுமொழியாகும். அதில் வீரர் என ஒருவர் போற்றப்படுவதும் பொருந்தும். சீனப் புரட்சியை சியாங் காய் சேக் நிறுத்தியிருந்தால் மா சே துங், துரோகியாக சித்தரிக்கப்பட்டிருப்பார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி தோல்வி கண்டிருந்தால் அவர் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டிருப்பார்.
புக்கிட் கெப்போங்கில் உயிர் நீத்த போலீஸ்காரர்கள் அன்றைய அரசாங்கம் எதுவாக இருந்தாலும் போலீஸ் படை உறுப்பினர் என்னும் முறையில் தங்கள் கடமையைச் செய்தனர். அது போற்றப்பட வேண்டிய தியாகம் ஆகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் வரலாற்றில் பகடைக் காய்கள் ஆவர்.
மாட் இந்ராவும் கம்யூனிஸ்ட்களும் தங்கள் போராட்டத்தில் தோல்வி கண்டார்கள். ஆகவே வரலாற்றில் அவர்களுக்கு இருண்ட பகுதிதான் கொடுக்கப்படும்.
டிஎன்ஏ: அம்னோ தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வரலாற்று உண்மைகளை திரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் அம்னோ செய்துள்ளது வியப்பைத் தரவில்லை.
அடையாளம் இல்லாதவன்_5fb: மாட் இந்ரா கம்யூனிஸ்ட் என்றால் அதில் என்ன தவறு? காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து மலாயா சுதந்திரம் பெறுவதற்கு கம்யூனிஸ்ட்களும் தேசியவாதிகளும் போராடினர் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இதில் வேறுபாடு என்னவெனில், கம்யூனிஸ்ட்கள் ஆயுதங்களுடன் போராடினர். தேசியவாதிகள் பிரிட்டிஷாருடன் “நட்புறவாக” இருந்தனர்.
அதனால் அம்னோ தலைமையிலான தேசியவாதிகளை பிரிட்டிஷார் விரும்பினர். அவர்கள் ‘தந்திரமாக’ கம்யூனிஸ்ட்களை நாட்டின் எதிரிகள் என சித்தரித்தனர்.
வரலாற்றைச் சரி செய்யும் பொருட்டு கல்வியாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் ( தயவு செய்து அரசியல்வாதிகள் வேண்டாம்) அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
கறுப்பு மம்பா: கைரி அவர்களே உங்கள் கதை முடிந்தது. மாட் சாபு விவாதம் நடத்துவதற்கு ஒன்றுமே இல்லை. ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான் முன்னுரை எழுதியிருக்கும் ஜோகூர் பெருமக்கள் ( ‘Pengukir Nama Johor’ ) என்னும் புத்தகத்தை மாட் சாபு எடுத்துக் காட்டினால் போதும்.
சைமன் லீ 3ed5: அம்னோவின் நியூ சண்டே டைம்ஸ் “மாட் சாபு ‘துரோகி” என்னும் தலைப்புடன் முதல் பக்கச் செய்தியை வெளியிட்டிருந்தது.
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதன் தலைப்புச் செய்தி ‘மாட் இந்ரா சுதந்திரப் போராளி’ என இருக்கும் என நம்புகிறேன்.
நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஏழை மலாய்க்காரர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற அதிகாரத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளே உண்மையான துரோகிகள்.
டூட்: ஜோகூர் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் யோசனை கூறுவதற்காக நான் காத்திருக்கிறேன்.