மலேசியாவில் மாற்றத்திற்கு முட்டுக்கட்டை இடுகிறது “மடமையினர் ஆட்சி”, ரசாலி

நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சக்தி மக்களிடம் இருந்தபோதிலும், அவர்கள் விவேகமான முடிவு எடுக்க முடியாமல் இருக்கின்றனர் என்று அம்னோவின் மூத்த தலைவரான தெங்கு ரசாலி நேற்று கூறினார்.

இது நமது கல்வி முறையின் விளைபயன். அது இனவாத கொள்கை “சிந்தனைக்கு அடிமைப்படுத்தப்பட்ட”  ஒரு தலைமுறையினரை உருவாக்கியுள்ளது.

“நமது வாக்குகளை சரியான வேட்பாளர்களுக்கு அளிப்பதன் மூலம் நாம் நமது இன்னல்களை அகற்றவதற்கான சக்தி நம்மிடம் இருக்கிறது. ஆனால் நமது அடிமைப்படுத்தப்பட்ட சிந்தனை நமது எதிர்காலம் மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சரியான தேர்வுகளைச் செய்வதற்கு நமது கைகளுக்கு வழிகாட்ட இயலவில்லை”, என்று நேற்று ஈப்போவில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வில் அவர் கூறினார்.

கெராக்கான் கட்சியின் நிறுவனரும் கல்விமானுமான சைட் ஹுசேன் அலட்டாஸை மேற்கோள் காட்டி மக்களை வேண்டுமென்றே மடமையினராக வைத்திருக்கும் அரசாங்க தலைமைத்துவத்தை “மடமையினர் ஆட்சி” என்று தெங்கு ரசாலி வர்ணித்தார்.

இது, வருமான இடைவெளி குறைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்ட இன அடிப்படையிலான புதிய பொருளாதாரக் கொள்கை அதற்கு நேர் எதிர்மாராகச் சென்றுள்ளது குறித்து அறிவார்ந்த முறையில் ஆய்வு செய்யத் தவறியது போன்ற பல சம்பவங்களை உருவாக்கியுள்ளது என்றாரவர்.

“இக்கொள்கையை எவ்வளவு காலத்திற்கு நாம் பின்பற்றுகிறோமோ, அதற்கும் அப்பால்தான் நாம் நமது முதலாவதான இலக்கிலிருந்து தள்ளியிருப்போம்”, என்று ரசாலி மேலும் கூறினார்.

அரசாங்கத்தை நம்ப முடியாது

அரசாங்கத்தின் செயல்பாட்டை எதிர்பார்த்த பலனுக்கு எதிர்மாறான விளைவை ஏற்படுத்தும் மருந்தை தொடர்ந்து கொடுத்து வரும் மருத்துவரின் செயலுடன் அவர் ஒப்பிட்டார்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில், மருத்துவரிடம் ஏதாவது கோளாறு இருக்க வேண்டும். அதைவிடக் கடுமையானது அதே மருத்துவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் நோயாளியின் கோளாறாகும் என்று தெங்கு ரசாலி கூறினார்.

இந்த “மடமையினர் ஆட்சி”யிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் தங்களுடைய சக தோழர்களுக்கு போதிக்க வேண்டும், ஏனென்றால் தற்போதைய கல்வி முறை இதனைச் செய்யும் என்றும் நம்ப முடியாது என்றாரவர்.

“இன்று, நாம் அவர்கள் (அரசாங்கம்) உண்மையைத் தெரிவிப்பவர்களாக நடந்து கொள்வார்கள் என்று இனிமேலும் நம்ப முடியாது. எதிர்காலத்தை நமது கையில் எடுத்துக்கொள்வது நமது பொறுப்பாகியுள்ளது.”

“ஆகவே, நமது நடவடிக்கைகளின் மூலம் அரசியல் விழிப்புணர்வை போதித்து மேம்படுத்தும் வேளையில், இந்நாட்டு கிராமப்புற மற்றும் நகர்புற மக்கள் அனைவரும் தங்களுடைய ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விடுபட்டு, புதிய நாள் உதிப்பதை வரவேற்க எழுச்சி பெறுவார்கள் என்று நம்புவோம். இவ்வாறுதான் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் துங்கு அப்துல் ரஹ்மான் (முதல் பிரதம மந்திரி) இரக்கமும் கருணையும் மிக்க ஆண்டவன் பெயரில் இந்நாட்டை தோற்றுவித்து இந்நாடு ‘என்றுமே அதன் மக்களின் நலன் நாடும்’,” என்றார் என்று தெங்கு ரசாலி கூறினார்.