ரானி சிலாங்கூர் பாஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்கிறார் ஹசான்

மதம் மாற்றம் தொடர்பாக ஹசான் வெளியிட்டுள்ள வீடியோ முக்கியமானது அல்ல எனக் கூறியுள்ள சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் அப்துல் ரானி ஒஸ்மான் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அந்த மாநில ஆணையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி கூறுகிறார்.

ஆவி வாக்காளர்கள் போன்ற பல நெருக்கடியான பிரச்னைகள் நாட்டில் உள்ளதாக ரானி கருத்துரைத்துள்ளது பற்றி ஹசான் குறிப்பிட்டார்.

“சமயக் கண்ணோட்டத்தில் சிறிது கற்பனை செய்து பாருங்கள். ஆவி வாக்காளர்கள் பிரச்னையைக் காட்டிலும் முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்தில் சேருவது மிக முக்கியமானது எனத் தெரியும்.”

‘இதனைத்தான் நான் ஒட்டுண்ணிகள் என கூறினேன். அவர்கள் பாஸ் கட்சியைத் தடம் புரளச் செய்து விட்டனர்.”

“பாஸ் கட்சியில் உள்ள என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். உங்களுக்கு இது போன்ற தலைவர்தான் இருக்கிறார். நீங்கள் அது போன்ற தலைவர்களை அகற்ற வேண்டும்,” என தமது கோலாலம்பூர் இல்லத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் ஹசான் கூறினார்.