தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) ஐந்து முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்கத் தவறி விட்டது என பெர்சே 2.0 கூறுகிறது.
அதனால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான அது தெரிவித்தது.
அந்த ஐந்து பிரச்னைகள் என பெர்சே 2.0 கூறுவது:
-வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு,
-தீவகற்ப மலேசியாவில் வாக்குகளுக்காக குடியுரிமை மோசடி,
-1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்தை அமலாக்குவதும் தேர்தல் குற்றங்கள் பற்றிய விளக்கங்களை விரிவுபடுத்துவது,
-‘கறை படிந்த’ அரசியலை நிறுத்துவதற்கான திட்டம்,
-அனைத்துலகப் பார்வையாளர்களை அழைப்பது
அதன் காரணமாக தேர்தல் மோசடியும் இதர முறைகேடுகளும் தங்கு தடையின்றித் தொடரும் “சாத்தியம் மிக அதிகமாக” இருப்பதாக பெர்சே 2.0 கருதுகிறது.
“தவறுகளைத் திருத்தவும் இப்போதும் எதிர்காலத்திலும் மலேசியர்களுடைய நன்மைக்காக நல்லது செய்யவும் கிடைத்த