தியோ பெங் ஹாக் மரணம் மீதான அரச விசாரணை ஆணையம் குற்றம் சாட்டிய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தவறு செய்யவில்லை என ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் அந்த மூவரும் எந்தத் தவறும் செய்யவில்லை என ஏஜி அலுவலகம் கூறியுள்ளதாக நஸ்ரி அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே அந்த மூன்று அதிகாரிகளுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது,” என அவர் சொன்னார்.

























