இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவுக்கு 0.58 பில்லியன் ரிங்கிட் வாணிக உபரி கிடைத்தது. அந்த மாதத்தில் அதன் மொத்த வாணிக மதிப்பு 103.15 பில்லியன் ரிங்கிட் ஆகும். இந்த அளவு 16.1 விழுக்காட்டு ஏற்றத்தைக் குறித்தது.
பிப்ரவரி மாதம் நாட்டின் ஏற்றுமதிகள் 14.5 விழுக்காடு அதிகரித்து 56.87 பில்லியன் ரிங்கிட்டாகவும் இறக்குமதிகள் 18 விழுக்காடு கூடி 46.29 பில்லியன் ரிங்கிட்டாகவும் இருந்ததாக அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சு கூறியது.
மின்சார, மின்னியல் பொருட்கள், திரவ மய இயற்கை எரி வாயு, செம்பனை எண்னெய், இரசாயனப் பொருட்கள், சுத்திகரிக்கப்படாத பெட்ரோலியம் ஆகியவை முக்கியமான ஏற்றுமதிப் பொருட்களாகும்.
அமெரிக்காவில் பொருளாதார மீட்சி, சீனாவில் உற்பத்தி அதிகரிப்பு, ஆசியான் நாடுகளில் தயாரிப்புத் தொழில்கள் விரிவடைந்தது ஆகியவை பிப்ரவரி மாதம் மலேசிய ஏற்றுமதிகள் கூடியதற்கு முக்கியக் காரணங்களாகும்.
மின்சார, மின்னியல் பொருட்கள், இரசாயனப் பொருட்கள், எந்திர சாதனங்கள், உபரிப் பாகங்கள் ஆகியவை முக்கியமான இறக்குமதிப் பொருட்களாகும்.
இவ்வாண்டு முதல் இரண்டு மாதங்களில் 19.33 பில்லியன் ரிங்கிட் வாணிக உபரி பதிவு செய்யப்பட்டதாகவும் அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சு கூறியது.
2012ம் ஆண்டுக்கு மலேசிய ஏற்றுமதிகள் 3.2 விழுக்காடு கூடும் என பாங்க் நெகாரா ஆரூடம் கூறியுள்ள வேளையில் அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சு 5 முதல் 6 விழுக்காடு வரை அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளது.
பெர்னாமா