இத்தனைத் தவறுகளை எப்படி தற்செயல் என்பது?

“தவறு ஒன்று, இரண்டு என்றால் தற்செயலாக நிகழ்ந்தது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால்,புதிய வாக்காளர் பதிவில் ஒரே மாதிரியாக 19 தவறுகள் நிகழ்ந்திருப்பது-நிச்சயம் மோசடிதான்.”

 

இராணுவ அதிகாரிகளின் அடையாளக் கார்டைப் பயன்படுத்தி அஞ்சல் வாக்காளர்கள் பதிவு

கிட் பி: அஞ்சல் வாக்குகளை இரட்டிப்பாக்கும் தந்திரம் இது.இராணுவத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவருக்கு அவர் பணி ஓய்வு பெற்ற பின்புதான் தெரிய வந்தது, அவர் இராணுவத்தில் இருந்த காலத்திலும் அவரது சாதாரண அடையாளக் கார்ட் எண்ணில் அவர் ஒரு வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதாவது, யாரோ ஒருவர் அவரது பெயரில் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்களித்துச் சென்றுள்ளார்.தேர்தல் ஆணையம் (இசி) உடந்தையாக இல்லையென்றால் இதைச் செய்ய முடியுமா?

ஃபெர்ட் டான்: ராசா எம்பி சொல்வது சரிதான். சாதாரண தவறு என்று இதை ஒதுக்கிவிட முடியாது.தவறு ஒன்று, இரண்டு என்றால் தற்செயலாக நிகழ்ந்தது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால்,புதிய வாக்காளர் பதிவில் ஒரே மாதிரியாக 19 தவறுகள் நிகழ்ந்திருப்பது-நிச்சயம் மோசடிதான்.

இசி அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இப்படிப்பட்ட கோளாறுகள் நிகழ முடியாது.

கேஜென்: அரசாங்க இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறது; மைய நீரோட்ட ஊடகங்கள் மொத்தமும் அதன் கட்டுப்பாட்டில்; அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தி திடீர் மீ பொட்டலங்களை இலவசமாக வழங்குகிறது; அள்ளி இரைக்க அளவற்ற பணம் கையிருப்பில் உள்ளது; சொல்வதைக் கேட்க இசி இருக்கிறது.

இவ்வளவு இருந்தும், ஏமாற்றும் வேலைகளிலும் ஈடுபடுகிறது பிஎன்.வெட்கமாக இல்லை! நம்பிக்கை இழந்துவிட்டார்களா அதன் தலைவர்கள்?

இதனால்தான் சொல்கிறோம் அடையாள மை தேவை என்று. அது இருந்தால் இரண்டு தடவை வாக்களிக்க முடியாதல்லவா. இதை எப்படி இசி-க்குப் புரிய வைப்பது.

பங்சா மலேசியா: இசி அதனைத் “கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு” என்கிறது. எத்தனை தடவைதான்  கவனக்குறைவு ஏற்படும்? போதும் ஐயா! நீங்கள் சொல்லும் கதையில் பல ஓட்டைகள். மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Zz2XX:எத்தனை தவறுகள்; எத்தனை தவறுகள். இதற்குமேலும் இசி தயாரித்த வாக்காளர் பட்டியலை எப்படி நம்புவது? ஏமாற்றுவதன் மூலம்தான் அம்னோவால் தேர்தல்களில் வெல்ல முடியும். அதற்கு இசி-யும் உடந்தை.பெர்சே 3.0 க்கு அவசியமேற்பட்டுள்ளதுபோல் தெரிகிறது.

பெயரிலி_3f6d:இரண்டு தடவை வாக்களிப்போருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்.

பெயரிலி_4196: இசி, வாக்காளர் பட்டியலை உடனடியாக சரிசெய்ய வேண்டும். உள்துறை அமைச்சு இதை விசாரிக்க வேண்டும்.இது சாதாரண விசயம் அல்ல.

இதில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பிஎன் அரசும் இசி-யும் ஒன்றிணைந்து செயல்படுவதாகத்தான் நினைக்கத் தோன்றும்.

அன்பானவன்: இவ்வளவு தவறுகள் இருக்கும்போது அடுத்த தேர்தலில் மாற்றரசுக் கட்சிக்கு ஏது வாய்ப்பு?

பெர்சே தலைவர் எஸ்.அம்பிகா, குறிப்பிட்ட நாளுக்குள் வாக்காளர் பட்டியலைச் சரிப்படுத்த வேண்டும் என்று இசி-க்கு கெடு வைக்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் பெர்சே 3.0-க்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இத்தனை கோளாறுகளுக்கும் அடையாள மைதான் தீர்வு. 

மலேசியாவில் பிறந்தவன்: வாக்காளர் பட்டியலைச் சரிப்படுத்த முடியாவிட்டால் இசி-இல் இருப்பவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.

தவறில்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரித்து வைத்திருப்பதும் தேர்தல்களை நியாயமான முறையில் நடத்துவதும்தான் அவர்களின் கடமை. அவர்கள் மக்களை வைத்து அரசியல் ஆடக்கூடாது.

எல்லாருக்கும் நியாயம்: இராணுவத்தினருக்கு அஞ்சல் வாக்குகள் தேவையில்லை. அவர்கள் காடுகளுக்குள்ளோ, போர்க்களத்திலோ இல்லையே. எல்லாரும் முகாம்களில் இருக்கிறார்கள். முகாம் எங்கிருக்கிறதோ அந்த இடத்தின் வாக்காளர்களாக அவர்களைப் பதிவு செய்ய வேண்டியதுதானே.

TAGS: