சபாஷ் (Syabas) ஆறு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிவப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது

நீர் விநியோக சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் (Syabas ) நிறுவனம் பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலாலம்பூர், கோலா சிலாங்கூர், சபா பெர்ணாம் ஆகிய பகுதிகளில் சிவப்பு குறியீடு அவசர நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.

சுங்கை சிலாங்கூர் (SSP2) நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு (LRA) மின்சாரத்தை வழங்கும் நடமாடும் ( mobile ) மின் உற்பத்தி எந்திரம் பழுதடைந்ததால் அந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீர் அளவு குறைக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாகி ருஸ்லான் ஹசான் கூறினார்.

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் 290,529 வாடிக்கையாளர்களுக்கு 950  மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விநியோகம் செய்து வந்தது  என அவர் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.

மின் உற்பத்தி எந்திரம் பழுதடைந்ததால் அதன் உற்பத்தி 320 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

புகார்கள் அல்லது விசாரணை செய்ய விரும்புவோர், சபாஷ் வாடிக்கையாளர் சேவையுடன்- கட்டணம் இல்லாத 24 மணி நேரத் தொலைபேசித் தொடர்பு எண் 1-800-88-5252 வழி தொடர்பு கொள்ளலாம். அல்லது  39222 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தகவல்களை அனுப்பலாம். அல்லது சபாஷ் நிறுவனத்தின் முகநூல் ல்லாது டிவிட்டர் கணக்கிலும் புகார் செய்யலாம்.

பெர்னாமா

TAGS: