டாக்டர் மகாதீர் அரச குடும்பத்தினர் அதிகாரங்களைக் குறைத்த போது யாரும் ஆத்திரப்படவில்லை

“சுங்கத் துறை தடுப்புப் பகுதியிலிருந்து கிளந்தான் சுல்தான் சட்ட விரோதமாக தமது Porsche ரக ஆடம்பரக் காரை ஒட்டிச் சென்றது அவற்றுள் ஒன்றாகும்.”

“மலாய் ஆட்சியாளர்களுக்கு மரியாதை கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்”

விஜய்47: மலாய் ஆட்சியாளர்களுடைய பாதுகாவலர்களாக அம்னோவும் அதற்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும் இப்போது முழு மூச்சாக இயங்கத் தொடங்கியுள்ளன.

அது உண்மையில் வெட்கமே இல்லாத ஒர் இரட்டை வேடத்தின் உச்சக் கட்டமாகும்.

அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டும் அதே முக்கிய ஊடகங்களும் அரச குடும்பத்திரை கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் மோசமாக விமர்சனம் செய்த போது ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை பற்றிய அவற்றின் கவலை எங்கே போனது?

அம்னோவைக் காப்பாற்றுவதற்கும் மகாதீர் தமது சர்வாதிகார வழிகளைத் தொடருவதற்கும் ஆட்சியாளர்கள் தங்கள் பொறுப்புக்களைத் தவறாகப் பயன்படுத்தினர் என்பது மீது அந்த நேரத்தில் பத்திரிக்கைகள் அன்றாடம் செய்திகளை வெளியிட்டது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

சுங்கத் துறை தடுப்புப் பகுதியிலிருந்து கிளந்தான் சுல்தான் சட்ட விரோதமாக தமது Porsche ரக ஆடம்பரக் காரை ஒட்டிச் சென்றது அவற்றுள் ஒன்றாகும்

தங்களது குள்ள நரி வேலைகளுக்கு ஏற்ப அவை இப்போது பிகேஆர் தலைவர்களான அஸ்மின் அலியும் தியான் சுவாவும் என்ன கூறினர் என்பதைச் சொல்லாமல் எதிர்க்கட்சிகளைத் தாக்கும் முழு பக்க விளம்பரங்களை அவை வெளியிட்டுள்ளன.

புத்ராஜெயாவைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ‘உடல்களை நசுக்கும்’  பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் வியூகத்தின் ஒரு பகுதியாக அது இருக்க வேண்டும் என்பதில் ஐயமே இல்லை.

நம்ப முடியவில்லை: ஆட்சியாளர்களை மதிக்காததற்காக யார் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் முதலில் மகாதீர் மீதுதான் குற்றம் சாட்டப்பட வேண்டும். ஆட்சியாளர்களுடைய அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டத் திருத்தங்களை முன்மொழிந்தவர் அவரே. இந்த நாட்டில் ஐக்கியத்தை சீர்குலைக்க தேச நிந்தனைக் கருத்துக்களை வெளியிடும் பெர்க்காசா போன்ற அமைப்புக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராஜா சூலான்: மகாதீர் காலத்தில் அம்னோ சுல்தான்களுக்கு செய்ததை யாரும் மிஞ்ச முடியாது. உத்துசானும் அந்த சிலாட் அமைப்பு, பெர்க்காசா போன்றவற்றைச் சார்ந்த கோமாளிகளும் இப்போது கூச்சல் போட வேண்டிய அவசியமே இல்லை.

அப்போது அவை எங்கு இருந்தன? மகாதீர் இன்னும் உயிருடன் இருக்கிறார். மகாதீர் அப்போது செய்ததை விசாரிக்க ஏன் அரச விசாரணை ஆணையத்தை அமைக்கக் கூடாது?

TAGS: