ஹிண்ட்ராப்: பக்காத்தான் 798 இடங்களுக்கு குறி வைக்கிறது; ஆனால் எங்களுக்கு எதுவுமில்லையா?

அடுத்த பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களில் ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவைச் சேர்த்துக் கொள்ள பக்காத்தான் ராக்யாட் மறுத்துள்ளது மீது அந்த அமைப்பு ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

13வது பொதுத் தேர்தலில் அது மொத்தம் 798 இடங்களில் போட்டியிட எண்ணியுள்ள போதிலும் அந்த முத்தரப்பு எதிர்த்தரப்புக் கூட்டணி ஹிண்ராப்-புக்கு ஒரிடத்தைக்  இடம் கூட வழங்கத் தவறியுள்ளதாக அதன் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் ஜெயதாஸ் வருத்தமுடன் கூறினார்.

ஹிண்ட்ராப் தனது அரசியல் பிரிவான மனித உரிமைக் கட்சி (HRP) வழி ஏழு நாடாளுமன்ற, 14 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக பக்காத்தானிடம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு இது வரை எந்தப் பதிலும் இல்லை. “

“நாங்கள் அம்னோ அல்லது பிஎன்-னை ஆதரிக்கவில்லை என்றும் புத்ராஜெயாவில் ஆட்சி மாற்றத்துக்கு இணங்குகிறோம் என்றும் மிகத் தெளிவாக ஹிண்ட்ராப் அரசியல் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. அது பக்காத்தானுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்ற போதிலும் இந்த நிலை காணப்படுகிறது,” என அவர் விடுத்த அறிக்கை கூறியது.

“பிகேஆர், டிஏபி, பாஸ் ஆகியவற்றின் உயர் நிலைத் தலைமைத்துவத்தைச் சந்திக்கவும் அதனுடன் ஒத்துழைக்கவும் நாங்கள் தயார் என கூறியுள்ள போதிலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என நாங்கள் நாடு முழுவதும் உள்ள ஹிண்ட்ராப் ஆதரவாளர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.”

ஹிண்ட்ராப் இடத்துக்காக பிச்சை எடுக்காது”

பக்காத்தான் கூட்டணி தான் போட்டியிட எண்ணியுள்ள 798 இடங்களில் ஐந்து விழுக்காடு தொகுதிகள் மீது  இன்னும் விவாதங்கள் நிகழ்வதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு வெளியிட்டுள்ள பத்திரிக்கைத் தகவல்கள் பற்றி ஜெயதாஸ் கருத்துரைத்தார்.

ஹிண்ட்ராப் இடங்களுக்காக ‘பிச்சை’ எடுக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். 2008 மார்ச் தேர்தலில் பக்காத்தான் பல இடங்களை வெல்வதற்கு உதவியுள்ள ஹிண்ட்ராப், தேவைப்பட்டால் சொந்தமாகப் போட்டியிடும் என்றார் அவர்.

“இது தேர்வு அல்ல. என்றாலும் நாங்கள் தவறான பாதையில் அடியெடுத்து வைத்து பக்காத்தானுக்கான இந்திய மண்டோர்களாக நாங்கள் விரும்பவில்லை,” என்றும் ஜெயதாஸ் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சி ஒரு முறை ஹிண்ட்ராப்-புடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுக்களை நடத்தியது. ஆனால் அது வெறும் பொது உறவு நடவடிக்கை என அதன் மூத்த தலைவர் பி உதயகுமார் நிராகரித்து விட்டார்.

பக்காத்தானிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கு ஹிண்ட்ராப் மேற்கொள்ளும் புதிய முயற்சி வரும் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும். ஏழ்மையில் உள்ள இந்தியர்களுக்கு பக்காத்தான் கூட்டணி என்ன திட்டங்களை வைத்துள்ளது என்பது பற்றி உரையாற்றுவதற்கு வருமாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TAGS: