“அமைச்சரவை உண்மையில் தேர்தல் சீர்திருத்தை நாடினால் அது எட்டக் கூடிய கனிகளைப் பறிக்க வேண்டும். சமுத்திரத்தையே கொதிக்க வைக்கப் போவதாக மார் தட்டக் கூடாது.”
நாடாளுமன்றத் சிறப்புக் குழு பெர்சே எட்டு கோரிக்கைகளுக்கு அப்பாலும் செல்லும்
பார்வையாளன்: திடீர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பணிகள் நின்று விடும் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அது, மக்களையும் எதிர்க்கட்சிகளையும் முட்டாளாக்குவதற்கான பொது உறவு நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
கடந்த காலத்தில் பல்வேறு மோசடிகள், நியாயமற்ற வியூகங்கள் பிஎன் தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளது. ஆகவே தங்களுடைய வாய்ப்புக்களைப் பாதிக்கக் கூடிய எந்த மாற்றத்தையும் அது செய்யும் சாத்தியமே இல்லை.
அடுத்த தேர்தலில் தான் தோல்வி காணாமல் இருப்பதை உறுதி செய்ய பிஎன் உண்மையில் ஏற்கனவே நடப்பில் உள்ள மோசடிகளுடன் கூடுதலாக சில வியூகங்களையும் இணைத்துள்ளதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
அடையாளம் இல்லாதவன்_5fb: நான் நம்பவில்லை. நாடாளுமன்றத் தேர்வுக் குழு மீது போதுமான நம்பகத்தன்மை இல்லை. இந்த சொற்றொடரில் பிடி இருப்பதை நாம் உணர வேண்டும். ” என்றாலும் திடீர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பணிகள் நின்று விடும்.”
13வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நிகழும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்போது அந்தக் குழுவும் பயனற்றதாகி விடும். பெர்சே எட்டுக் கோரிக்கைகளுக்கு அப்பால் செல்வதால் என்ன லாபம் ? நஸ்ரி அவர்களே, உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்ளலாம். எங்களை அல்ல.
குவிக்னோபாண்ட்: நாடாளுமன்றத் சிறப்புக் குழு கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கும் பொருட்டு அதன் சுவையை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் அதன் பணி முடியும் முன்னர் நடப்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதன் வேலையும் நிறுத்தப்பட்டு விடும். சீர்திருத்தங்கள் உண்மையில் அமலாக்கப்படுவதே முக்கியமானது.
இந்த நாட்டில் அரச ஆணையப் பரிந்துரைகள் கூட அமலாக்கப்படுவது இல்லை. அவை அமலாக்கப்பட்டாலும் கூட அவை அரை மனதாக அல்லது தாறுமாறாக நடப்புக்குக் கொண்டு வரப்படும்.
இப்போது அவ்வாறு செய்யக் கூடாது. நாடாளுமன்றத் சிறப்புக் குழு கூட வேண்டும். மக்களுக்கு மனநிறைவைத் தரும் யோசனைகள் காணப்பட வேண்டும். அவை முழுமையாகவும் அமலாக்கப்பட வேண்டும். அதற்குப் பின்னரே தேர்தல் நிகழ வேண்டும்.
அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட்டால் அந்தத் தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் இருக்காது என மக்கள் கருத வேண்டியதுதான்.
பேஸ்: நஸ்ரி அறிக்கையை உண்மையிலும் உண்மையென நாங்கள் நம்ப வேண்டுமா? சீர்திருத்தங்கள் ஏதும் இருக்காது என சில வாரங்களுக்கு முன்பு அம்னோ/பிஎன்-னும் தேர்தல் ஆணையமும் கூறின.
ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லது தப்பிப்பதற்கு வழியை அது கண்டு பிடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் அது எப்படி நேர்மாறாக மாறியிருக்காது. அந்த பல தலைகளைக் கொண்ட நாகப் பாம்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
டிகேசி: அமைச்சரவை உண்மையில் தேர்தல் சீர்திருத்தை நாடினால் அது எட்டக் கூடிய கனிகளைப் பறிக்க வேண்டும். சமுத்திரத்தையே கொதிக்க வைக்கப் போவதாக மார் தட்டக் கூடாது.
எட்டக் கூடிய கனிகள்:
1) வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது
2) அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவது
3) குறைந்த பட்சம் 21 நாள் பிரச்சார காலம்
நாடாளுமன்றத் சிறப்புக் குழு அமைக்கப்படுவதின் உண்மையான நோக்கம் என்ன தெரியுமா? அடுத்த தேர்தலில் நடப்பு ஆட்சியாளர்கள் வெற்றி பெறும் வரையில் நேரத்தைக் கடத்துவதாகும்.
என் ரகசியம்: “அவை பங்கு கொண்டாலும் பங்கு கொள்ளாவிட்டாலும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு கூடும். காரணம் நாங்கள் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் அவை அவ்வாறு விரும்புவதாகத் தெரியவில்லை”, நஸ்ரி.
நஸ்ரி இன்னும் கனவு உலகில் சஞ்சரிக்கிறார். நாம் அரசாங்கத்தை நம்பவில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார். நமது நாட்டை அந்த வேடதாரிகளிடமிருந்து கைப்பற்ற நாங்கள் விரும்புகிறோம். நாம் அவரை “நம்ப” வேண்டும் என அவர் சொல்கிறார். நீங்கள் சொல்வது சரியான நகைச்சுவை. உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன.
3காம்: எட்டு பெர்சே கோரிக்கைகளை அமலாக்குவததற்கான கால வரம்பை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.