தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யுசுப் மற்றும் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமர் ஆகிய இருவரும் தங்களுடைய அம்னோ தொடர்பை அந்த சுயேட்சை அமைப்பில் நியமிக்கப்படுவதற்கு முன்பு வெளியிட்டிருக்க வேண்டும் என்று பெர்சே கூறுகிறது.
“இது மிகக் கடுமையான விவகாரம். இது அவர்களுடைய கட்சி சார்பு ஈடுபாட்டை காட்டுகிறது.
“அவர்கள் கட்சி உறுப்பினர்கள் என்பதைக்கூட வெளியிடாதது ஒரு (பிரச்னை),” என்று பெர்சே தலைவர் அம்பிகா இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அம்னோ உறுப்பினர் என்று அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும் தான் ஒரு “பொதுச்சேவை ஊழியர்” மற்றும் “இன்னும் ஊழியர்தான்” என்று வான் அஹமட் விடுத்துள்ள அறிக்கை குறித்து கருத்துரைக்குமாறு கேட்டபோது, அது இசியின் கட்சி சார்பு நிலையை காட்டுவதாக இருக்கிறது. அந்நிலை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் “அது ஒரு சுயேட்சையான அமைப்பாக” உருவாக்கப்பட்டதற்கு முரணாக இருக்கிறது என்று அம்பிகா கூறினார்.
“அது ஒரு பெருடியன் தடுமாற்றம். அவர் (வான் அஹமட்) உண்மையைச் சொல்கிறார். அதுதான் இசியுடனான நமது மையப் பிரச்னை. அவர்கள் சுயேட்சையானவர்களாக இருந்திருக்க வேண்டும்”, என்று அவர் வருத்தப்பட்டார்.