பெர்சே 3.0 பேரணியின் போது தனது ஆதரவாளர்களில் சிலர் வன்முறையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே இன்று கூறியுள்ளது.
அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் வன்முறையாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் “வழக்கத்திற்கு மா றானவை” என பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வருணித்துள்ளார்.
போலீஸ் வாகனம் ஒன்று தலைகீழாக கவிழ்க்கப்பட்டது உட்பட வன்முறை நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. அந்த சம்பவங்களுக்கு தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட ஏஜண்டுகள் காரணமாக இருக்கலாம் என அவர் சொன்னார்.
“எங்களுக்கு அந்த சந்தேகம் உள்ளது. ஏனெனில் எங்கள் ஆதரவாளர்களைப் பொறுத்த வரையில் அது மிகவும் வழக்கத்துக்கு மாறான நடத்தையாகும்,” என அவர் கேஎல் சென்ட்ரலில் நடத்திய சுருக்கமான நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.