குந்தியிருப்புப் போராட்டத்தை சாலைப் பேரணியாக மாற்றியதற்கு போலீசாரே பொறுப்பு

“பெரும்பாலான மக்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது தான் போலீசாரின் கடமை. ஆனால் சிறிதளவு தூண்டப்பட்டதும் ஆக்கிரமிப்பாளர்களாக மாறுவது அல்ல.”

பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளும் நீரும் பாய்ச்சப்பட்டன

மக்கள் மேலாண்மை: பெர்சே 3.0ன் அடிப்படை நோக்கம் குந்தியிருப்புப் போராட்டம் ஆகும். ஆனால் அம்னோ புத்ராக்களும் அவர்களுடைய அடிவருடிகளும் அதனை சாலைப் போராட்டமாக மாற்றி விட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை சீராக டாத்தாரான் மெர்தேக்காவுக்கு நடந்து சென்று அங்கு சில மணி நேரம் குந்தியிருக்க போலீஸ் ஏன் அனுமதிக்கக் கூடாது? அவர்கள் நூறாயிரக்கணக்கில் திரண்டு விட்ட ஆதரவாளர்களக் கண்டு அஞ்சினர் என்பதே உண்மை.

நியாயமானவன்: தடுப்புக்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்களைக் கைது செய்து நீதிமன்ற ஆணைக்கு இணங்க அவர்களுக்கு அபராதம் போடுங்கள். நேற்று அந்த டாத்தாரானில் பல போலீஸ்காரர்கள் இருந்தார்கள். தடுப்பை உடைத்த ஒரு சிலரை அவர்களால் பிடிக்க முடியாதா?

அதைச் செய்யாமல் சாலைகளில் அதுவும் பெட்டாலிங் சாலை வரை நின்று கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஏன் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பாய்ச்ச வேண்டும்? இரசாயனம் கலந்த நீரை ஏன் பாய்ச்ச வேண்டும்? பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்ல.

நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட டாத்தாரன் சுற்று வட்டத்திலிருந்து மக்களை விரட்டுவதிலேயே போலீசார் குறியாக இருந்தனர். குடி மக்களிடம் தங்கள் வலிமையைக் காட்டுவதே அவர்களுடைய எண்ணமாக இருந்தது.

இது போலீசார் சட்டத்தை மீறியதற்கு ஒப்பாகும். தங்களது அரசியல் எஜமானரான பிஎன் சார்பில் போலீஸ் அராஜகமும் அச்சுறுத்தலும் அகங்காரமும் காட்டப்பட்டுள்ளது.

பெர்சே 1.0 நிகழ்ந்தது முதல் ஜனநாயகத்தில் எந்த மாற்றமும் இல்லை. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்த வாக்குறுதி எல்லாம் வெறும் உதட்டளவு சேவை மட்டுமே.

ஜெடி_யார்: பெரும்பாலான மக்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்ட தடுப்புக்களை அகற்ற சிலர் முயன்றால் அவர்களை போலீசார் கைது செய்திருக்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான் போலீசாரின் கடமை. ஆனால் சிறிதளவு தூண்டப்பட்டதும் ஆக்கிரமிப்பாளர்களாக மாறுவது அல்ல.

கலவரத்தைத் தூண்டுகின்ற யாரையும் போலீசாரிடம் ஒப்படைக்கும் முதலாவது நபர்களாக பெர்சே பாதுகாவலர்கள் இருப்பர் என பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா கூறியுள்ளார்.

பொது மக்களைத் தாக்குமாறு ஆணையிடுவதற்கு உள்துறை அமைச்சருக்குக் காரணம் கிடைத்து விட்டதாக நான் நம்புகிறேன். நுழைவாயில்களை மூடி விட்டு மக்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டதால் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததாகவும் நீரைப் பாய்ச்சியதாகவும் சொல்வது கிரிமினல் செயலாகும்.

இந்த நிகழ்வு நடக்கும் போது ஒளிந்து கொண்டிருந்த ஹிஷாமுடினும் நஜிப்பும் பதவி துறக்க வேண்டும்.

நிலைமை மோசமடைந்ததற்கு கவைக்கு உதவாத காரணங்களை பிஎன் சொல்லும் என எதிர்பார்க்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆளும் அரசாங்கம் தேர்தலிம் மோசடி செய்கிறது  என்பதை பெர்சே மக்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

ஜேம்ஸ் டீன்: நேற்று குழப்பத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் “ஆர்ப்பாட்டக்காரர்கள்” பெர்சே 3.0ல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். நான் அங்கு இருந்தேன். உண்மையான ஆர்ப்பாட்டக்காரர்கள் கனவான்களைப் போல நடந்து கொண்டார்கள்.

தமது வேலையைச் செய்து விட்டதாகவும் எது நடந்தாலும் அதற்கு தாம் பொறுப்பில்லை என்றும் முதல் நாள் உள்துறை அமைச்சர் கூறியது, கலவரத்தைத் தூண்டுவதற்கு ஊர்வலத்துக்குள் ஊடுருவுமாறு போலீசாருக்கு வழங்கிய சமிக்ஞை என்றே கருத வேண்டும்.

நடந்ததற்கு நஜிப்பும் அவரது அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும். போராட்டத்தின் முடிவில் கலவரத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் மூட்டினர் எனச் சொல்வதில் அர்த்தமே இல்லை. அந்த பேரணி அமைதியாக நடந்து விட்டதைக் கண்டதும் கலவரத்தை மூட்டுமாறு அந்த கைக்கூலிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்க வேண்டும்.

அஸிஸி கான்: பேரணியில் ஏற்பட்ட இடையூறுகளுக்கும் அம்னோ ஏஜண்டுகளும் அரச மலேசியப் போலீஸ் படையும் கோலாலாம்பூர் மாநகராட்சி மன்றமும் காரணம் என்பது தெளிவாகும். பிஎன்-னுக்கு விடை கொடுக்கும் கடைசி நிகழ்வாக இது இருக்கட்டும்.

அடையாளம் இல்லாதவன்_3ec6: பிஎன் அரசாங்கத்தின் முட்டாள்தனத்தை அதன் நடவடிக்கைகளே மெய்பித்து விட்டன. பெர்சே பேரணி பாதுகாப்புக்கு மருட்டல் அல்ல என ஹிஷாமுடினே கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மாநகரம் முழுவதையும் மூடி விட்டனர்.

போலீசார் அமைத்த சாலைத் தடுப்புக்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி விட்டன. அதனால் பொது மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. பிஎன் ஆட்சியாளர்களின் கபட நாடகம் இதுதான்.

TAGS: