‘பெர்சே 2.0லிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. போலீசாருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் பொது மக்களிடம் உள்ளன.’
ஹிஷாம்: சீரான நடவடிக்கை முறைகளில் கேமிராக்களைப் பறிமுதல் செய்வதும் அடங்கும்
கேடொட்: பத்திரிக்கையாளர்களுடைய தனிப்பட்ட சொத்துக்களைக் பறிமுதல் செய்வதற்கு போலீசாருக்கு என்ன உரிமை உள்ளது ? அவ்வாறு பறிமுதல் செய்யப்படுவதற்கு அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் ? எந்தச் சட்ட விதிகளின் கீழ் அவை பறிக்கப்பட்டன ?
தாங்கள் விரும்பியதைச் செய்வதற்கு போலீசார் அவ்வளவு வல்லமையும் அதிகாரம் கொண்டவர்களா ?
லூயிஸ்: பத்திரிக்கையாளர்களிடமிருந்து கேமிராக்களையும் நினைவு கார்டுகளையும் கைப்பற்றுவது எத்தகைய ஆட்சி ? கம்யூனிஸ்ட் ஆட்சிகள்தான் அவ்வாறு செய்யும். கேமிராக்களையும் படங்களையும் கண்டு கூட அதிகார வர்க்கம் அஞ்சும் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோமா ?
போலீசார் நியாயமாகவும் தொழில் ரீதியாகவும் நடந்து கொண்டால் அச்சப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்களிடம் மறைப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதனால் தான் படங்கள் அனுமதிக்கப்படவில்லை.
நியாயமானவன்: உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களே, எங்களை முட்டாள்களாக எண்ணுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏற்கனவே இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ள படங்களையும் வீடியோக்களையும் பார்த்த பின்னர் போலீசார் வேண்டுமென்றே ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டி விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரம் செய்யா விட்டால் குழப்பத்தை உருவாக்குமாறு போலீசாருக்கு ஆணையிடப்பட்டிருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக நடந்து கொண்டதால் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இரசாயன நீரைப் பாய்ச்சினர். கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்தனர். எல்லாம் நிலைகுலைந்து குழப்பம் மேலோங்கியது.
குவிக்னோபாண்ட்: ஹிஷாமுக்கு அரசியல் அறிவே கிடையாது. முதிர்ச்சி அடைந்த ஜனநாயகங்கள் பத்திரிக்கையாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.
பறிமுதல் செய்வது “சீரான நடவடிக்கை முறைகளில் ஒன்று” என்றால் ஏதோ கடுமையான கோளாறு காணப்படுகிறது.
ஜெடி_யார்: ஹிஷாம் சொல்கிறார், “எனக்குத் தெரியாது. அது சீரான நடவடிக்கை முறைகளில் அதுவும் ஒன்றாகும்”. நல்லது அப்படி என்றால் பெர்சே 2.0ல் ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை.
அர்மகடோன்: நினைவு கார்டுகளைக் கைப்பற்றுவது போலீசாரின் சீரான நடவடிக்கை முறைகளில் ஒரு பகுதி என ஹிஷாமுடின் சொல்கிறார். இது பெர்சே 2.0லிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஆகும். போலீசாருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் பொது மக்களிடம் உள்ளன.
மேப்பிள்சிராப்: இதுதான் நடைமுறை என்றால் சட்ட ஒழுங்கு இல்லாத அரசாங்கத்தில் வழி நடத்தப்படும் சட்ட ஒழுங்கு சீர்குலைந்த நாடாகும். பத்திரிக்கைச் சுதந்திரம் எங்கே போயிற்று ?
பத்திரிக்கையாளர்களிடமிருந்து கேமிராக்களையும் நினைவு கார்டுகளையும் பிடுங்குவது என்னைப் பொறுத்த வரையில் உண்மையை நசுக்குவதற்கு ஒப்பாகும்.
டத்தோஸ்: தவளை தன் வாயால் கெடும் என்பதை ஹிஷாம் மீண்டும் காட்டி விட்டார்.