கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் பங்கேற்றது தொடர்பில் தேடப்ப்படும் 49 பேருடைய படங்களை போலீஸ் இன்று வெளியிட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்கான விசாரணைகளில் உதவுவதற்காக அவர்களுடைய வாக்குமூலங்கள் தேவைப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே இன்று நிருபர்களிடம் கூறினார்.
அந்த 49 பேரும் கூடிய விரைவில் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் சரணடைய வேண்டும் என்றும் முகமட் சொன்னார்.
அந்தப் பேரணி தொடர்பாக வழக்குரைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள், வர்த்தக உரிமையாளர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து 258 புகார்களைப் போலீஸ் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.