”போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களும் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக சென்று தேட அனுமதிக்கப்பட வேண்டும்”

அதிகாரிகள் தங்கள் விசாரணையில் நியாயமாக நடந்து கொள்வர் எனக் கூறப்படும் போது  பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக சென்று தங்களைத் தாக்கியவர்களைத் தேடுவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைவர் ஒருவர் போலீசாருக்குச் சவால் விடுத்துள்ளார்.

பெரிய அளவில் நிகழ்ந்த பெர்சே பேரணியின் போது வன்முறைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 141 பேர்கள் ஒரு வாரத்துக்குள் சரணடைய வேண்டும் இல்லை என்றால் வீட்டுக்கு வீடு தேடப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவர் என போலீஸ் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றிக் கருத்துரைத்த டிஏபி சிகாம்புட் எம்பி லிம் லிப் எங் அவ்வாறு சவால் விடுத்தார்.

“அது தான் நடைமுறை என்றால் போலீசார் போலீஸ் முரட்டுத்தனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக தம்மைக் குத்திய எல்லா போலீஸ் அதிகாரிகளையும் தாம் அடையாளம் காட்ட முடியும்  என செர்டாங்கைச் சேர்ந்த ஒரு மாதுவை ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சோதனைகளை நடத்த அனுமதிக்க வேண்டும்,” என அவர் கோலாலம்பூரில் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

அவருக்கு முன்னர் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள ஹிண்ட்ராப் தலைவரும் சிலாங்கூர் டிஏபி குழு உறுப்பினருமான வி கணபதிராவ், தாம் போலீஸ் தடையை மீறவில்லை என்றும் குழப்பம் மூண்ட போது தாம் அந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததாகவும் நிருபர்களிடம் கூறினார்.

இண்ட்ராப் 2.0 பற்றிய கேள்விகளையே எழுப்பினர்

போலீசார் வன்முறை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தம்மைச் சிக்க வைப்பதற்குப் பதில் எதிர்வரும் இண்ட்ராப் 2.0 என கூறப்படும் ஹிண்ட்ராப் பேரணி பற்றிய தகவல்களை பெறுவதிலேயே குறியாக இருந்ததாக அவர் சொல்லிக் கொண்டார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணிக்குப் பின்னர் 2007ம் ஆண்டு கணபதிராவ் கைது செய்யப்பட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தேடப்படும் தனி நபர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என மெய்பிக்கப்பட்டால் போலீசார் மீது அவதூறு அல்லது அச்சுறுத்தல் வழக்கை போடும் உரிமையைப் பெற்றுள்ளதாக லிம் மேலும் சொன்னார்.

“அவர்களுடைய படங்களை வெளியிடுவதற்கு முன்னர் போலீசார் விசாரணைகளை நடத்தியிருக்க வேண்டும். கடந்த சில நாட்களாக வெளியாகும் தகவல்களைப் பார்க்கும் போது போலீசார் விசாரிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றார் அவர்.

அந்த பட்டியலில் உள்ள நான்கு புகைப் படங்கள் ஒரே நபருடையவை என்பதை லிம் சுட்டிக் காட்டினார்.

“ஆகவே சந்தேகத்துக்குரிய மொத்த நபர்கள் எண்ணிக்கை 138 ஆகும். 141 அல்ல.” என்றார் அவர்.