“நாம் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில்தான் நாம் அக்கறையுள்ள குடிமக்களாக இருப்பதை நிறுத்திக் கொண்டு மிரட்டல்களை விடுக்கின்றோம்.”
உடற்பயிற்சி’ செய்வதற்கு உரிமை உண்டு என்கிறார் ஒரு வழக்குரைஞர்
லிம் துக் சன்: நான் பெர்சே 2.0, 3.0 ஆகியவற்றில் கலந்து கொண்டவன். என்னைப் பொறுத்த வரையில் ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கு பொது இடங்களில் கூடுவதற்கான உரிமை, அமைதியாக ஒன்று திரளுவதற்கான உரிமை சம்பந்தப்பட்டதாகும்.
ஒருவருடைய அல்லது ஒரு குடும்பத்தின் வீட்டுக்கு முன்னால் கூடுவது- நீங்கள் நடைபாதையில் நின்று கொண்டிருந்தால் கூட அந்த உரிமையைப் பயன்படுத்துவதாகக் கருத முடியாது. அது முழுக்க முழுக்க தெளிவான அச்சுறுத்தலாகும்.
நாம் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில்தான் நாம் அக்கறையுள்ள குடிமக்களாக இருப்பதை நிறுத்திக் கொண்டு மிரட்டல்களை விடுக்கின்றோம்.
எடுத்துக்காட்டுக்கு, நான் பிஎன் அரசியல்வாதியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாகரீகப் பண்புகள் காரணமாக அவர் அமைதியாக வீடு திரும்புவதற்கு உள்ள உரிமையை நான் மதிப்பேன்.
நடப்பு அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர், அந்த மரியாதையை எதிர்த்தரப்புக்கு தருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. என்றாலும் பெரும்பாலான மலேசியர்கள் விஷயம் தெரிந்தவர்கள் என நான் எண்ணுகிறேன்.
அத்தகைய முறையற்ற நடவடிக்கைகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் பல மலேசியர்கள் போராடி வருகின்ற உரிமைகளை அது கேலிக் கூத்தாக்குகின்றது.
ஒதுங்கி நிற்பவன்: வழக்குரைஞர் எட்மண்ட் போன் அவர்களே, தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தெளிவாகச் சொல்லுங்கள்.
பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சியை செய்வதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு என நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்தப் பயிற்சியைப் பொருத்தமான இடங்களில்-உடற்பயிற்சி மய்யங்கள் அல்லது பூங்காவில் செய்யலாமே ? ஆனால் நிச்சயமாக பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் அல்ல.
அவர்கள் அவ்வாறு செய்ததற்கான மறைமுகமான நோக்கம் உங்களுக்குத் தெரிந்துள்ளது. ஆனால் ஏன் அவர்கள் அதற்காக புக்கிட் டமன்சாரா வீடமைப்புப் பகுதிக்குச் சென்று அதுவும் அம்பிகா வீட்டுக்கு முன்னால் அந்த முட்டாள்தனமான உடற்பயிற்சியை (butt-exercise) செய்ய வேண்டும்?
அது அச்சுறுத்தல், மிரட்டல், தகராற்றை மூட்டுவது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
மஞ்சள் நீர்மூழ்கி: அவர்கள் அவரை அவமானப்படுத்தியதோடு மட்டும் நிற்கவில்லை. அவரை அவர்கள் எச்சரித்துள்ளனர். மருட்டியுள்ளனர். அச்சுறுத்தியுள்ளனர்.
ஆகவே இங்கிருந்து நாம் எங்கே போக வேண்டும் ? மோசமான சம்பவங்கள் நிகழ்வதற்காக நாம் காத்திருக்க வேண்டுமா ? முதலாவதாக பெர்சே என்பது அம்பிகாவைப் பற்றியதல்ல. அது நியாயமான அரசாங்கத்தைப் பெறுவதற்கு மக்கள் விடுக்கும் கோரிக்கை ஆகும்.
ஏஜிஎம்: எட்மண்ட் போனின் சட்ட ரீதியிலான கருத்துக்களைப் பெறுவதற்காக அவருடன் மலேசியாகினி தொடர்பு கொண்டது. அவர் தமது கருத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை- பெர்சேயும் எதிர்க்கட்சிகளும் நடத்தும் போராட்டத்தில் ஒரு பகுதியாகும்.
ஆனால் சிலருக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்பதே தெரியவில்லை. வேறு வழி இல்லை. நாம் அதற்குப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும். சட்டம் நியாயமாகவும் சமமாகவும் பயன்படுத்தப்படுகிறதா என்பதே இப்போதைய கேள்வி ஆகும்.
நல்ல மனிதர்கள்: ஆர்ப்பாட்டம் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. தாங்கள் கோமாளிகள் என்பதை அவர்கள் தெளிவாக அந்த ஆர்ப்பாட்டம் மூலம் எடுத்துக் காட்டி விட்டார்கள்.
அடையாளம் இல்லாதவன்: போன் சொன்னது சரி என நான் கருதுகிறேன். ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வீட்டுக்கு முன்னால் கடையை அமைத்து ரோஸ்மா மான்சோருக்கு எதிராக கூறப்படுகின்ற எல்லா விஷயங்களுடன் அவருடைய படங்களை ஒட்டி வைப்பதற்கு எனக்கு உள்ள உரிமையை போன் தற்காக்க முன் வருவாரா ?
அந்த ஆர்ப்பாட்டம், அம்பிகா வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு நிகழ்வைப் போன்றதுதான்.
அடுத்த வாரம் நான் அங்கு இருப்பேன். என்னை நீங்கள் பாதுகாக்க வேண்டும்.
பீரங்கி: ஏன் அம்பிகாவை மட்டும் இலக்காக கொள்ள வேண்டும் ? அவர் ஒரு மாது, முஸ்லிம் அல்லாதவர் என்பதுதான் காரணமா ?
இது உண்மையில் நியாயமற்றது. பாகுபாடானது. இது போன்ற நிகழ்வுகள் தொடருமானால் பிஎன்-னுக்கான இந்தியர் வாக்குகள் சரிவது திண்ணம். காரணம் அவர்கள் ஒரு தனி நபரைத் தாக்குகின்றனர். மற்றவர்களை அல்ல.
நம்பிக்கை, ஒரே மலேசியா எல்லாம் எங்கே போனது ? இந்தியர்களுடைய மனதில் அந்த முட்டாள்தனமான சம்பவங்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும். பிஎன்-னுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கு இந்தியர்களுக்கு இறுதியில் ஒரு நல்ல காரணம் கிடைத்து விட்டது.
ஒரே எம்: அந்த குழுவின் செய்தியை நான் ஏற்கவில்லை. ஏனெனில் அம்பிகாவை அவமானப்படுத்துவதே அந்தச் செய்தி எனக்குத் தெரிகிறது என போன் கூறுகிறார்.
முன்னாள் இராணுவ வீரர்கள் என தங்களை அழைத்துக் கொண்ட அந்தக் குழுவின் நடவடிக்கையால் தாம் அவமானப்படுத்தப்பட்டதாக அம்பிகா கருத வேண்டிய அவசியமே இல்லை. தங்களது கணவர்கள் பகிரங்கமாக குதங்களை ஆட்டிக் காண்பித்ததற்காக அவர்களுடைய மனைவிகளே வெட்கப்பட வேண்டும்.