மெர்தேகா கதை “கானல் நீராகி” விடும்

“இன்னும் எஞ்சியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள். அதனால் அம்னோ தயாரித்த சுதந்திரப் போராட்ட வரலாறு கரைந்து ‘கானல் நீராகி’ விடும்’.”

 

 

 

மாட் சாபு: அம்னோ வரலாற்று உண்மைகளைக் கண்டு அஞ்சுகிறது

ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: அம்னோ ஆதரவு பெற்ற பேராசிரியர்கள் மன்றம் 1946ம்  ண்டுக்குப் பிந்திய மலாயா வரலாற்றையும் சுதந்திரப் போராட்டத்தையும் தவறாக விளக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தப் பேராசிரியர்களில் பெரும்பாலோர் அம்னோ அல்லது பெர்க்காசா உறுப்பினர்கள் அல்லது அம்னோ/பிஎன் தொடர்புடைய அரசு சாரா அமைப்புக்களில் அங்கம் பெற்றவர்கள். ஆகவே நாம் கீழ் வரும் முடிவுகளுக்கு வரலாம்.

1) மலாயா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததே இல்லை. அதனால் சுதந்திரப் போராட்டம் என்பது அம்னோ கற்பனை.

2) 1955ம் ஆண்டுக்குப் பின்னர் கூட்டணி போன்ற சார்பு அரசாங்கங்கள் வழியாக தூர கிழக்கில் மேற்கத்திய ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் மேற்கத்திய ஏகாதிபத்திய சிந்தனைகளுக்கு உதவவும் இடச்சாரிப் போக்கைக் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் அமைப்புக்களையும் ஒழிப்பதற்கு அம்னோ பிரிட்டிஷ்காரர்களுடன் ஒத்துழைத்தது அல்லது சதி செய்தது.

ஆகவே யார் இங்கே உண்மையான வீரர்கள் அல்லது துரோகிகள்? சித்தாந்த அடிப்படையில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர்களா? அல்லது பிரிட்டிஷ் ஆதரவு பெற்று பாதுகாக்கப்பட்ட அம்னோவா ?  நவீன காலனித்துவத்தை அம்னோ அப்போது பின்பற்றிய குற்றத்தை புரியவில்லையா?

கலா: என்னைப் பொறுத்த வரையில் எல்லா நடிகர்களும் முகவர்களும் இன்னொரு உலகத்துக்கு சென்ற பின்னரே சுதந்திரத்துக்கு வழி வகுத்த “உண்மையான மலாயா வரலாறு” குறித்து நல்ல முறையில் ஆய்வு செய்ய முடியும்.

அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதால் தங்களது விருப்பம் போல் வரலாற்றை கற்பனை செய்யலாம். எழுதலாம். விளக்கலாம்.

எடுத்துக்காட்டுக்கு மா சே துங் உயிருடன் இருந்த வேளையில் அவரது புகழை ஒவ்வொரு கட்சித் தொண்டரும் பாடினர். அவர் மறைந்ததும் பல்லவியே மாறி விட்டது.

மாட் சாபு வெளிப்படையாகப் பேசுவது எனக்கு பிடித்துள்ளது. என்றாலும் அவர் நடப்பு சூழ்நிலையில் அதிகாரிகளுடன் வாதம் நடத்துவதற்கு உறுதியான களத்தில் நிற்கவில்லை.

மலேசிய இனம்: நாம் ஒரு காலத்தில் காலனித்துவ ஆட்சியில் வாழ்ந்தது இல்லையா ? மெர்தேகா என்பது உண்மையானது தானா ? அதற்கு பதில் ‘ஆம் ‘ என்றால் நாம் யாரிடமிருந்து சுதந்திரத்தை வாங்கினோம் ? கம்யூனிஸ்ட்களிடமிருந்தா ? அல்லது பிரிட்டிஷ்காரர்களிடமிருந்தா?

மாட் சாபு சொல்வது தவறா? அல்லது அந்தப் பேராசிரியர்கள் சொல்வது சரியா?

அடையாளம் இல்லாதவன்_408b: நாம் இந்த விவகாரத்துக்கு ஒரு முடிவு கட்டுவது நல்லது. நாம் இப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்களுக்கு செல்வோம். பெர்சே 2.0 கோரிக்கைகள், பெருகி வரும் ஊழல்கள் ஆகியவையே அவை. அம்னோவும் ஊடகங்களும் நமது கவனத்தை திசை திருப்புவதற்கு முயலுகின்றன.

உண்மையான வரலாற்றுப் பாடத்தைக் கற்றுக் கொடுத்த மாட் சாபுவுக்கு நன்றி. 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி அடைந்த பின்னர் அவர்களை கவனித்துக் கொள்வோம்.

பேஸ்: சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் (அம்னோ, மசீச, மஇகா-வில் உள்ளவர்கள் மட்டுமல்ல) குறித்த முக்கிய பிரச்னையிலிருந்து உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆகியவை நழுவிச் செல்வதை பாருங்கள். கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் போது உயிர் நீத்தவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை இப்போது அவை தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றன.

திசை திருப்புவது மலிவான தந்திரமாகும். அவற்றுக்கு வேறு வழி இல்லை. ஏனெனில் காட்டுவதற்கு ஒன்றுமில்லை.

இன்னும் எஞ்சியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள். அதனால் அம்னோ தயாரித்த சுதந்திரப் போராட்ட வரலாறு கரைந்து “கானல் நீராகி” விடும்.

அடையாளம் இல்லாதவன்: மாட் சாபு சொல்வது சரியோ தவறோ அது குறித்து வாதம் நடத்துவது தான் பொருத்தமான வழி. அதற்குப் பதில் அவருடைய வீட்டுக்கு போலீசாரை அனுப்புவது சரியல்ல. அது அச்சுறுத்தலாகும். இப்போது எல்லா விஷயத்திலும் போலீஸ் சம்பந்தப்படுகிறது. இது என்ன ஜனநாயக நாடா?

கறுப்பு மம்பா: மாட் சாபு நிலைமையைச் சரி செய்து வருகிறார். உண்மை அவருக்கு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் பல சாலைகளுக்கு இடச்சாரி தேசியவாதியான புர்ஹானுடின் ஹெல்மியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் மலாயா சுதந்திரத்துக்குப் பாடுபடவில்லை என்றால் அதிகாரிகள் இன்று வரை அவரை ஏன் கொண்டாட வேண்டும்?

TAGS: