அரசியலில் குதிக்க மாட்டேன்; அம்பிகா திட்டவட்டம்! [12.09.2011 – தமிழ்நேசன்]
தமது தலைமையிலான பெர்சே போராட்டமானது அரசியல் நோக்கத்தை கொண்டது அல்ல. மாறாக மக்களின் நலனை முன்நிறுத்தி நடத்தப்படும் போராட்டமாகும். அதேவேளையில் அரசியலில் ஒரு போதும் குதிக்கமாட்டேன். அரசியல் கட்சிகளில் இணையவும் மாட்டேன் என்று பெர்சே இயக்கத்தின் தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ. ஒரு கோடியே 20 இலட்சத்தை ஒதுக்கியுள்ளது! [ 12.09.2011 – மக்கள் ஓசை]
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒரு கோடியே 20 இலட்சம் வெள்ளியை மானியமாக வழங்கியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.
அன்பளிப்புக் கூடைகளைக் கொடுத்து இந்தியர்களிடம் இனி ஓட்டு வாங்க முடியாது! [12.09.2011 – மக்கள் ஓசை]
எந்நேரத்திலும் நடைபெறலாம் என கூறப்படும் நாட்டின் 13ஆவது பொதுத்தேர்தல் மிகவும் சவால்மிக்க ஒன்றாக இருக்கும். கடந்த காலங்களைப் போல் அன்பளிப்புப் பொட்டலங்களைக் கொடுத்தும், மானியங்களை அறிவித்தும் இனி ஓட்டு கேட்க முடியாது என்று டத்தோ டாக்டர் டென்னிசன் ஜெயசூரியா கூறினார்.
வெளிநாட்டுப் பெண்களை மணப்பதில் இந்திய இளைஞர்கள் ஆர்வம் : சிவசுப்பிரமணியம் [12.09.2011 – சாந்திராஜன் – மலேசிய நண்பன்]
இந்நாட்டில் வாழும் இந்திய இளைஞாகள் வெளிநாட்டுப் பெண்களை மணப்பதில் ஆர்வம் காட்டி வருவது ஏதோ ஒரு எச்சரிக்கை மணி ஓசையைக் காட்டுவதாக இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ சிவசுப்பிரமணியம் கூறினார்.