பக்காத்தான் நாடற்ற இந்தியர் பிரச்னை மீது செயல்படத் தொடங்கியுள்ளது

பக்காத்தான் ராக்யாட் இந்திய சமூகத்துக்கு உதவி செய்யத் தவறி விட்டதாக ஹிண்ட்ராப் தொடர்ந்து குறை கூறி வந்த போதிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த நாட்டில் பிறந்தும் நாடற்றவர்களாக இருக்கு நூற்றுக்கணக்கான மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை இன்று  தொடங்கியது.

“அந்தப் பிரச்னை இனிமேலும் இந்தியர் பிரச்னை அல்ல. இது மலேசியப் பிரச்னை. இது அரசாங்கத்தின் பிரச்னை,” என எதிர்த்தரப்புத் தலைவர் பதிவுக்குப் பின்னர் நடைபெற்ற செராமாவில் கூறினார்.

பெரும்பாலும் வயதானவர்களான அந்த நாடற்ற தனிநபர்கள் தங்களது சிவப்பு நிற மைக்  கார்டுகளையும் பிறப்புச் சான்றிதழ்களையும் கொண்டு வந்திருந்தனர்.

கிள்ளான் நகராட்சி மன்ற மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த 20 முகப்புக்களில் அவர்கள் தங்களைப் பதிந்து கொண்டனர்.

அவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலோர் இந்திய சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சிவப்பு நிற மைக் கார்டுகளை வைத்திருந்த சீன சமூகத்தைச் சார்ந்தவர்களும் அங்கு இருந்தார்கள்.

சிலாங்கூரில் உள்ள நாடற்ற தனிநபர்களுடைய புள்ளிவிவரங்களைத் திரட்டும் மாநில அரசு  மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பதிவு நடத்தப்பட்டது. அவர்களுடைய குடியுரிமை விண்ணப்பங்கள் மீது கூட்டரசு அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கு உதவியாக அந்தப் புள்ளி விவரங்கள் திட்டப்பட்டன.

” 55 ஆண்டுகள் முடிந்து விட்டன. இருந்தும் இந்த நாட்டில் பிறந்து  வளர்ந்த சிலருக்கு அடையாளக் கார்டுகள் இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த நேப்பாளியர்களுக்கு அடையாளக் கார்டுகள் கிடைக்கின்றன,” என பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுவதை மேற்கோள் காட்டி அன்வார் சொன்னார்.

 

TAGS: