“அரசாங்கம் மருட்டுவதையும், கைது செய்வதையும் அடிப்பதையும் தொடர்ந்தால் அது தனது மரண ஒலையில் கையெழுத்திடுவதற்கு ஒப்பாகும்.”
பெர்சே பேரணிக்குப் பின்னர் அரசாங்கம் அச்சத்தை மூட்டி வருகிறது
கைரோஸ்: அரசாங்கம் தொடங்கியுள்ள அச்சத்தை மூட்டும் மிரட்டும் இயக்கம் வெற்றி பெறப் போவதில்லை.சுதந்திரமான மனித உணர்வை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும் ?
நியாயத்துக்கும் வெளிப்படையான போக்குக்கும் போராடும் மலேசிய மக்கள் குரலை நீங்கள் எப்படி ஒடுக்க முடியும் ?
அரசாங்கம் தனது மக்களை எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் கொடுங்கோன்மைக்கு எதிரான விடுதலைக் குரலை மௌனமாக்க முடியாது.
உண்மையில் மக்களை அடி பணிய வைக்கும் அரசாங்கம் எந்த அளவுக்கு முயலுகிறதோ அந்த அளவுக்கு மக்கள் திருப்பிப் போராடப் போகிறார்கள். மக்களுடைய உறுதிப்பாடும் வலுவடையும்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கொதித்து எழுவர். அரசாங்கத்தின் மீது ஆத்திரம் அதிகரிக்கும். வெறுப்பும் கூடும்.
அரசாங்கம் மருட்டுவதையும், கைது செய்வதையும் அடிப்பதையும் தொடர்ந்தால் அது தனது மரண ஒலையில் கையெழுத்திடுவதற்கு ஒப்பாகும். அதன் அஸ்தமனம் விரைவாகும். அப்போது அதன் நல்லடக்கத்தின் போது யாரும் அழ மாட்டார்கள்.
நிலக் கண்ணி வெடி: பெர்சே கூச்சல் போடுவதற்கு விட்டு விடுங்கள். அது சிறுபான்மை மக்களின் கூச்சலாகும்.
அவர்கள் தேர்தலுக்கு முன்னதாகவும் தேர்தலின் போதும் தேர்தலுக்குப் பின்னர் தங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றலும் அரசாங்கத்தை வீழ்த்த விரும்புகின்றனர்.
அவர்களை கூச்சல் போட விட்டு விடுங்கள். அது காதை அடைக்க முடியாது. ஆனால் தொந்தரவாக இருக்கலாம். சிறுபான்மை மக்கள் ஒன்று செய்ய முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். என்றாலும் சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டுள்ள வெறி பிடித்த நாய்களை எப்படிக் கவனிப்பது என்பது எங்களுக்குத் தெரியும்.
நம்பாதவன்: நிலக் கண்ணி வெடி அவர்களே, அண்மையில் மெர்தேக்கா மய்யம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை நீங்கள் கேள்விப்படவில்லையா ? அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மை செய்யப்பட வேண்டும் என 92 விழுக்காடு மலேசியர்கள் விரும்புகின்றனர்.
நடப்பு தேர்தல் நடைமுறைகளை கிட்டத்தட்ட பாதி மலேசியர்கள் நம்பவே இல்லை. உங்களுடைய ‘சிறுபான்மையினர் கூச்சல்’ அவ்வளவு தான்.
எல்லாம் இருக்கட்டும். இந்த நிலம் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. எல்லா மலேசியர்களுக்கும் சொந்தமானது.
Hmmmmmmmm: ‘வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ என்னும் பாணியை அரசாங்கம் பின்பற்றுகிறது. ஆனால் மக்களுக்குத் தெரியும் “வாய்மையே வெல்லும்” என்பது.
ரூபன்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காலத்திலிருந்து அரசாங்கம் அச்சத்தை மூட்டும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கி வருகிறது. இப்போது அது அதிகாரத்தை இழக்கக் கூடிய நிலைமை உருவாகி இருப்பதால் அது துரிதமடைந்துள்ளது.
அத்துடன் அது கட்டுப்பாட்டையும் இழந்து வருகிறது. குறிப்பாக அம்னோவில் உள்ள தீவிரவாதிகள் தங்கள் விருப்பம் போல் செயல்படுகின்றனர்.
மக்கள் இது போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும். மெர்தேக்கா மய்ய முடிவுகள் காட்டுவதைப் போல ஒரு சிலரே தேர்தல் முறையில் நம்பிக்கை வைத்துள்ளனர். இருந்தும் அரசாங்கம் மக்களுக்கு செவி சாய்க்க மறுக்கிறது. குரல் கொடுக்கவும் தயங்குகிறது.