உங்கள் கருத்து: “அது ஏனென்றால் மற்றவர்களின் குடுமி அவரிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற மிதப்பில் இருக்கிறார்.”
ஏஜியை எதுவும் செய்ய முடியாது என்றிருந்த நிலை மாறுகிறது
ஒடின்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள் மாட் ஜைன்னும் ரம்லி யூசுப்பும் சுமத்திய குற்றச்சாட்டுகள், அரசாங்கத்தின் அசிங்கத்தனத்தைத் தோலுரித்துக் காட்டின.ஆனால் அவற்றைப் பொருட்படுத்துவார் இல்லை.அவை ஒதுக்கித் தள்ளப்பட்டன.
அவற்றுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததே அவை உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மறுபுறம், அந்நிய தொழிலாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லையென்பதை வெளிச்சம் போட்டுக்காண்பித்த தெனாகானித்தா இயக்குனர் ஐரின் பெர்னாண்டஸ்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. “ தேச துரோகச் செயல்” செய்துவிட்டாராம், “மலேசியாவின் பெயரைக் கெடுத்துவிட்டாராம்”….
ஸிம்பாப்வே, பர்மா போன்ற நாடுகளின் நிலையில்தான் மலேசியாவும் உள்ளது.
தலைவெட்டி: அடுத்தடுத்து பிரதமர்கள் வந்தார்கள் இல்லையா, அவர்களின் அந்தரங்கங்களை அறிந்தவர் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல்.அதனால்தான் அவர் இன்னமும் அசைக்கமுடியாதபடி அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.
அவர்களின் குடுமி அவரிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற மிதப்பில் இருக்கிறார்.
கைரோஸ்:சட்டத்துறை அலுவலகத்தில் நிலவும் வண்ட வாளங்களை அம்பலப்படுத்த துணிச்சலுடன் முன்வந்துள்ள முன்னாள் சொலிசிடர்-ஜெனரல் II முகம்மட் யூசுப் ஜைனல் அபிடின், மாட் ஜைன், ரம்லி போன்றோருக்குப் பாராட்டுகள்.
ஏஜி அவரின் அரசியல் எஜமானவர்களுக்குக் கடன்பட்டிருப்பவர்.அதனால், ஆள் பார்த்தும் அரசியல் நோக்கிலும்தான் அவர் நடவடிக்கைகள் எடுப்பார்.
இது அனைவரும் அறிந்ததே.ஆனால், இப்போது நேர்மை உள்ளம் கொண்ட துணிச்சல்மிக்க சிலர் ஏஜிக்கே சவால் விடுக்க முன்வந்துள்ளனர்.
நமது பிரார்த்தனை என்னவென்றால் ஏஜி அலுவலகத்தில் நிலவும் ஒளிவுமறைவுகள் பற்றி அறிந்த மேலும் பலர், நியாயத்துக்காக போராட முன்வர வேண்டும்-அது நாட்டுக்கு நல்லது.
அனோனி: எந்தவோர் அரசிலும் நிறுவனத்திலும் கருத்துவேறுபாடுகளும் மாறுபட்ட அணுகுமுறைகளும் இருக்கத்தான் செய்யும். பெரும்பாலும் கீழ் அதிகாரிகள் மேலிடம் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள், மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்தாலும் தங்களை மாற்றிக்கொள்வார்கள்.ஆனால், அதற்கு ஒரு எல்லை உண்டு.சிலருக்கு மனச்சாட்சியின் உறுத்தலைத் தாங்கிக் கொள்ள முடியாது.
அப்படிப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தைவிட்டு விலகுவார்கள்.விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்வார்கள் அல்லது பணி ஓய்வில் அமைதி காண்பார்கள்.
முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்தார் என்பதற்காக அந்த நிறுவனத்தை அவர் குறை சொல்வது தப்பு என்று சொல்வது முறையல்ல.
ஸ்வைபெண்டர்: சட்டமீறலும் ஆள்பார்த்து வழக்குத் தொடுப்பதும் அம்னோ-பிஎன்னுக்குக் கைவந்த கலையாயிற்றே.
‘சுயேச்சை’ ஏஜி அதற்குச் சரியான ஆள்.இப்படிப்பட்ட வேலைகளை எந்தத் தரப்பின் தலையீடுமின்றி செய்வதாக அவரால் காட்டிக்கொள்ளவும் முடிகிறது.
ஜேம்ஸ்1067: செய்த வினை திரும்ப வரும்.சிலவற்றைக் கடந்து வந்துவிட்டதாக ஏஜி நினைத்தாலும் அவை திரும்ப வந்து அவருக்குச் சவால் விட்டு நிற்கின்றன.
முன்பு ரம்லி வந்தார். இப்போது அவருக்குத் துணையாக இருந்த முகம்மட் யூசுப் வந்துள்ளார்.