இராணுவ இரகசியம் விற்பனை-எம்ஏசிசி-இன் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கின்றன

“எம்ஏசிசி அதிகாரிகள் எல்லாருமே பக்காத்தான் ரக்யாட் எம்பிகளை விசாரிப்பதற்காக மட்டுமே உள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கிருக்கிறது நேரம்?”

 

தற்காப்பு இரகசியங்கள் விற்கப்பட்டதன்மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒடின்: யோசித்துப் பார்த்தால் அப்போதைய தற்காப்பு அமைச்சர்தான் இந்த இரகசியத் தகவல்களைப் பெற்று அதைத் தம் நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பாகிண்டா வழியாக அல்லது அவரின் தந்தை மூலமாக பிரெஞ்ச் நிறுவனத்துக்கு விற்றிருக்க வேண்டும்.

அமைச்சரால் மட்டுமே அத்தகவலைப் பெற முடியும்; அப்துல் ரசாக்கால் முடியாது.

அந்தத் தகவல் விற்பனை மூலம் கிடைத்த ரிம142மில்லியனிலும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப்பட்டதில் கிடைத்த ரிம450மில்லியனிலும் பெரும்பகுதி குறிப்பிட்ட அந்த அமைச்சருக்கே வழங்கப்பட்டிருக்கும் என்பது உறுதி.

அதனால்தான் எம்ஏசிசி (மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்) வாயைப் பொத்திக் கொண்டிருக்கிறது.

பெயரிலி #88568176: இது துரோகமாக அல்லவா தெரிகிறது. இந்த விசயத்திலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மெளனமாகத்தான் இருக்கப் போகிறாரா?

அவர் சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்விவகாரம் ‘மக்கள்நலம் சார்ந்ததல்ல’ என்று முடிவு செய்யப்படுமா?அவர் என்ன, சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா?

இடைத்தேர்தல் விரும்பி: லிம் கிட் சியாங் அவர்களே, எம்ஏசிசி அதிகாரிகள் எல்லாருமே பக்காத்தான் ரக்யாட் எம்பிகளை விசாரிப்பதற்காக மட்டுமே உள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கிருக்கிறது நேரம்?

நேற்றுத்தான் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மீது 17-ஆண்டுகளுக்கு முன் சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டைத் தூசிதட்டி எடுத்து விசாரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அற்ப காசு ரிம2,000சம்பந்தப்பட்ட விவகாரத்துக்காக தியோ பெங் ஹொக்கை விழுந்துவிழுந்து விசாரித்தனர், முடிவில் அவர் செத்தே போனார்.

இதுவோ, புத்ரா ஜெயாவையே தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடிய பில்லியன்-டாலர் ஊழல். இதற்கு பொறுப்பானவர்களைக் கூண்டில் நிறுத்த எம்ஏசிசி-இடம் ஆதாரங்கள் இருந்தாலும் அதற்கான துணிச்சல் இல்லை.

அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுக்க முனைந்தாலும் ஏஜி (சட்டத்துறைத் தலைவர்) தடுப்பார் அல்லது ‘மேல்நடவடிக்கை தேவை இல்லை’ என்று முத்திரை குத்தி விடுவார்.

தற்காப்பு இரகசியங்கள்மீது அவசரத் தீர்மானம்

அபாசிர்:இதைப் பற்றி ‘விசுவாசமிக்க’ அம்னோ உறுப்பினர்கள் விவாதிக்க மாட்டார்கள்.நஜிப்பின் மெய்க்காப்பாளர்களில் இருவர் முன்பின் தெரியாத மங்கோலியப்  பெண்ணை வெடிமருந்துகள் மூலம் சிதறடித்தது ஏன் என்று எவராவது வாய் திறந்து கேட்டார்களா?

இந்தியப் பெண்மணி ஒருவர், எல்லா இனங்களையும் சேர்ந்த தம் சகாக்களுடன் சேர்ந்து சுதந்திரமான நியாயமான தேர்தல்கள் தேவை என்று கோரிக்கை எழுப்பும்போது மட்டும் அவர்கள் தங்களின் ‘விசுவாச உணர்வை’ வன்முறைமூலம் வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

2zzzxxx: அம்னோவுக்கு பலநூறு மில்லியன் வருகிறதென்றால் எதுவுமே “இரகசியமில்லை”.

அவர்களை எவரும் தொட முடியாது. போலீஸ், எம்ஏசிசி, மக்களவைத் தலைவர் முதலானோர் அவர்களைப் பற்றி எவரும் கேள்வி கேட்பதைத் தடுக்கத்தானே இருக்கிறார்கள்.

டுரியான் தீமுன்: அதே வேளை, மாற்றரசுக் கட்சித் தலைவர் யாரோ ஒருவருடன் எங்கோ ஓரிடத்தில் குதப்புணர்ச்சியில் ஈடுபட்டார் என்று வெளிநாட்டு வழக்குரைஞர் ஒருவர் சொல்லட்டும், அது என்னமோ தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான விசயம் என்பதுபோல் போலீஸ் மொத்தமும், எம்ஏசிசி, சட்டத்துறைத் தலைவர், பெர்காசா, ஊடகங்கள் முதலிய அத்தனை பேரும் அதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படும்.

பெயரிலி #6194321469: இராணுவ இரகசியங்கள் பிரான்சுக்கு விற்கப்பட்ட விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் கொண்டுவரப்படும்போது பக்காத்தான் எம்பிகள் எல்லாருமே அவையில் இருக்க வேண்டும்.

இதில் இறுதிவரை ஒருகை பார்த்துவிட வேண்டும்.

வீரா: அவைத் தலைவர் என்ன சொல்வார் தெரியுமா-வழக்கு பிரெஞ்ச் நீதிமன்றத்தில் உள்ளது, எனவே அதை விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்பார்.பார்த்துக் கொண்டே இருங்கள்.

இராணுவ இரகசியங்கள் விற்பனை: ஒரு தேசத் துரோகம்

அஸ்லான்: விரைவில் எல்லாமே மறக்கப்படும்.சுவாராம் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ஒன்றும் நடக்காது.எல்லாமே நேரத்தை விரயமாக்கும் செயலாகத்தான் முடியும்.

தற்காப்பு நிறுவனங்கள் தங்கள் தளவாடங்களை விற்பனை செய்ய அரசு அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.அவர்களைப் பொருத்தவரை இது வியாபாரம்.அவ்வளவுதான். இதை அமெரிக்கா செய்கிறது, பிரிட்டன் செய்கிறது மற்ற நாடுகளும் செய்கின்றன.அதனால் சுவாராமுக்கு இதைத்தான் ஆலோசனையாகக் கூறுவேன் -வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

ஜெடை: இந்தத் துரோகச் செயலைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்.மக்களுக்கும் அதைத் தெரியப்படுத்த வேண்டும்.

TAGS: