“அன்வார் அதனைச் செய்ததாக சொல்லலாமே ? எல்லாவற்றுக்கும் மேலாக மூசாவைப் போன்ற நிபுணர்கள் அதற்கான சாட்சியங்களை மிக எளிதாக ஜோடித்து விடலாமே?”
அல்தான்துயா கொலை: நஜிப் சம்பந்தப்படவில்லை என நான் பாக் லா-விடம் கூறினேன்
வேட்டைக்காரன்: மக்களிடம் பொய் சொல்லி குற்றவாளிகளை பாதுகாக்க முடியும் எனமுன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) நம்பினால் அவர் தவறு செய்கிறார். நாங்கள் அந்த அளவுக்கு அப்பாவிகள் அல்ல.
அம்னோவைத் தற்காப்பதற்கு பல முன்னாள் ஐஜிபி-க்கள் திடீரென முன்வந்துள்ளது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு விரக்தி அடைந்த நிலையில் மேற்கொள்ளப்படும் தீவிர முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை.
மங்கோலிய மொழி பெயர்ப்பாளர் அல்தான்துயா ஷாரிபு விவகாரத்தைப் பொறுத்த வரையில் எல்லா ஆதாரங்களும் நீதிமன்ற வழக்கு விசாரணையும் முரண்பாடாக உள்ளது.
அன்வார் அதனைச் செய்ததாக சொல்லலாமே ? எல்லாவற்றுக்கும் மேலாக மூசாவைப் போன்ற நிபுணர்கள் அதற்கான சாட்சியங்களை மிக எளிதாக ஜோடித்து விடலாமே ?
சாடிரா: மூசா நீங்கள் ஒரு போலீஸ் அதிகாரி. அந்தக் கொலைக்கான நோக்கத்தை நீங்கள் ஏன் கண்டறியக் கூடாது ? குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நஜிப்பின் ஊழியர்கள். அவர்களுடைய எஜமானர் ஏன் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை ? குடிநுழைவு விவரங்கள் ஏன் அழிக்கப்பட்டன. நஜிப் ஏன் அழைக்கப்படவில்லை ?
அரசு சேவையில் உள்ள அனைவரும் தங்களது அரசியல் எஜமானர்களை சந்தோஷப்படுத்த விரும்புவதே முக்கியக் காரணமாகும். அந்தக் கொலைக்கான நோக்கத்தை நீங்கள் தெளிவுபடுத்தாத போது பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடம் நீங்கள் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் ?
அல்தான்துயா சுடப்பட்டு இராணுவத் தரத்திலான சி4 வெடிமருந்துகளைக் கொண்டு தகர்க்கப்பட்டார். அந்த வெடி மருந்துகள் எப்படி தற்காப்பு அமைச்சிலிருந்து வெளியில் வந்தன ?
பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அல்தான்துயா மட்டும் உங்கள் புதல்வியாக இருந்தால் நீங்கள் நிச்சயம் வேறு விதமாக செயல்பட்டிருப்பீர்கள்.
அரச மலேசியப் போலீஸ் படை மீதான நம்பிக்கை மிகவும் தாழ்ந்து விட்ட நிலையில் நீங்கள் உங்கள் வாயைத் திறந்து அதனை மேலும் மோசமாக்கியுள்ளீர்கள். மக்களை முட்டாள்களாக எண்ணுகின்றீர்கள்.
ஸ்விபெண்டர்: பல கேள்விகளுக்குப் பதில் இல்லை. கொலைக்கான நோக்கம் தெரியவில்லை. அவரைக் கொலை செய்வதற்கு நோக்கம் கொண்டிருந்தவர்கள் அதில் சம்பந்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் உள்ள நீதிமன்றத்தில் பல விஷயங்கள் அம்பலத்துக்கு வருகின்றன. அந்தக் கொலைக்குப் பின்னணியில் உள்ளவர்களுடைய அடையாளங்களும் அதற்கான நோக்கமும் விரைவில் சிக்கலிலிருந்து விடுபட்டு தெளிவாகும்.
உங்கள் அடிச்சுவட்டில்: இது இன்னொரு tai-chi ஆகும். மலேசியாகினி தனது பெயரை Tai-Chi செய்தி அறிக்கை என மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த முன்னாள் தலைமை சட்ட அமலாக்க அதிகாரியை எந்த அளவுக்கு நம்ப முடியும் ? குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளி எனக் கண்டு பிடிக்கப்பட்டாரா ? சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி என்ன சொல்வது ?
அல்தான்துயா கொலை செய்யப்பட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பணம் எங்கிருந்து வந்தது ? யார் யாருக்கு எவ்வளவு பணம் எதற்காகக் கொடுத்தார் ?
இவை அனைத்தும் முக்கியமில்லையா ? நீங்கள் பணம் வந்த பாதையை கண்டு பிடித்தால் கொலைக்கான காரணத்தை எளிதாக அறிந்து விடலாம்.
தாய்லெக்: அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றால் அல்தான்துயா கொலை செய்யப்பட்டதற்கான நோக்கத்தைத் தயவு செய்து சொல்லுங்கள். அவர்களுக்கு சி4 வெடி மருந்துகள் எப்படிக் கிடைத்தன ? அவருடைய குடிநுழைவு பதிவுகள் ஏன் அழிக்கப்பட்டன ? அந்த இரண்டு போலீஸ்காரர்களுடைய முகங்கள் ஏன் நீதிமன்றத்தில் எப்போதும் மூடப்பட்டுள்ளன ?
ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது என்பதை பள்ளிச் சிறுவன் கூட சொல்லி விடுவான்.