“குறைவாகக் கல்வி கற்றவர்கள் மட்டுமே இன்னும் பிஎன் ஆதரவாளர்களாக இருக்கின்றனர் என்பதையே மெர்தேக்கா மய்யம் நடத்திய ஆய்விலிருந்து நாம் அறியும் ஒரே விஷயமாகும். மற்ற அனைவரும் பிஎன்- னைக் கைவிட்டு விட்டனர்.”
நஜிப் செல்வாக்கு சரிகிறது
அடையாளம் இல்லாதவன்#19098644: நன்கு கல்வி கற்றவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், நிதி அடிப்படையில் சுதந்திரமாக இயங்கக் கூடியவர்கள் தெளிவாகவும் உரத்த குரலிலும் பேசி விட்டதையே அண்மைய மெர்தேக்கா ஆய்வு காட்டுகிறது. அவர்கள், செய்திகளுக்கு முக்கிய ஊடகங்களை நம்பியிருக்காதவர்கள். அரசாங்க சமூக நல உதவியை சார்ந்திருக்காதவர்கள்.
குறைவாகக் கல்வி கற்றவர்களும் சமூக நல உதவியைச் சார்ந்திருப்பவர்களும் மாற்று ஊடகத் தகவல்களைப் பெறுவதில்லை. அவர்களை வெற்றி கொள்ள வேண்டுமானால் பக்காத்தான் ராக்யாட் தனது செய்தியை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே மாறி விட்ட நகர மக்களுக்கு மேலும் போதிப்பதை நிறுத்திக் கொண்டு எஞ்சியுள்ள நேரத்தைக் கிராமப் புறங்களிலும் பகுதி நகர்ப்புறங்களிலும் எஞ்சியுள்ள நேரத்தைச் செலவு செய்யுங்கள். அங்கு வாழ்கின்ற மக்களுக்கு தகவல்களைச் சொல்லுங்கள்.
கறுப்பு மம்பா: புள்ளி விவரங்களைப் பாருங்கள். அதிக வருமானத்தைப் பெறுகின்ற மலாய்க்காரர் அல்லாதார் பிரதமர் நஜிப் ரசாக் தலைமைத்துவத்தை ஆதரிக்கவில்லை என்பது தெரிய வரும்.
அவர்கள் வளமானவர்கள். தகவல்களை நன்கு அறிந்தவர்கள். நாட்டைப் பாதிக்கின்ற நடப்பு விஷயங்களை புரிந்து கொண்டவர்கள்.
நல்லதாகத் தோன்றும் நஜிப் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நஜிப் தொடங்கியுள்ள பொருளாதார உருமாற்றத் திட்டங்களும் மறைமுகமான ஊழலும் நாட்டை அடுத்த பல தலைமுறைகளுக்கு கடனாளியாக்கி விடும் என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
வேட்டைக்காரன்: குறைவாகக் கல்வி கற்றவர்கள் மட்டுமே இன்னும் பிஎன் ஆதரவாளர்களாக இருக்கின்றனர் என்பதையே மெர்தேக்கா மய்யம் நடத்திய ஆய்விலிருந்து நாம் அறியும் ஒரே விஷயமாகும். மற்ற அனைவரும் பிஎன்-னைக் கைவிட்டு விட்டனர்.
கால ஒட்டத்தில் பிஎன் ஆதரவுத் தளம் காணாமல் போய் விடும். அதனால்தான் அது தனக்கு ஆதரவைப் பெருக்குவதற்கு பல சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களைப் பயன்படுத்துகிறது.
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் அது சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களினால் தேர்வு செய்யப்பட்டது மலேசியர்களால் அல்ல எனக் கூறலாம். அந்தப் பணியை நிறைவேற்றும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
ரூபன்: பிரதமருக்கு 65 விழுக்காடு அங்கீகாரம் கிடைத்திருப்பதே எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஏனெனில் சர்ச்சைக்குரிய பல விஷயங்களில் மௌனம் சாதிக்கிறார். உறுதியான முடிவை எடுக்கவும் அவர் தயங்குகிறார். செய்யப்பட்ட முடிவுகளை அமலாக்குவதிலும் அவர் உறுதியாக இல்லை.
ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஊழல் மீண்டும் எழுமானால் அவரது செல்வாக்கு எப்படி இருக்கும் ?
ஜான் பியர்: மலாய் சமூக ஆதரவு வலுவாக இருப்பதாக அந்த ஆய்வு காட்டியுள்ளது. அரசாங்கத்தின்பாகுபாடான கொள்கைகள் வழி அவர்களில் பலர் அதிக நன்மை அடைந்துள்ளதையே அது உணர்த்துகிறது.
வேலைகளுக்கு உத்தரவாதம், பதவிகளுக்கு உத்தரவாதம், குத்தகைகளுக்கு உத்தரவாதம், பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதற்கு உத்தரவாதம், நீங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத கடன்களுக்கு உத்தரவாதம்….. இவை எல்லாம் இருக்கும் போது வியப்பில்லை.
பார்ட்டினாமஸ் 2020: மக்கள் தேர்வு செய்யாத, திருடர் கும்பல் ஒன்றினால் அமர்த்தப்பட்ட ஒர் அரசியல்வாதி பற்றிய ஆய்வு குறித்த நான் கவலைப்படப் போவதில்லை.
அடையாளம் இல்லாதவன்#36465711: பெரும்பான்மை மலேசியர்கள் இன்னும் நம்பியுள்ள முக்கிய ஊடகங்கள் வழி தகவல்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை அந்த ஆய்வு உணர்த்துகிறது.
மூத்த அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஸ்கார்ப்பியோன் ஊழல் பற்றிய முக்கிய திருப்பங்களை முக்கிய ஊடகங்கள் புறக்கணித்துள்ள வேளையில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஊழல் தலைப்புச் செய்திகளாக அவற்றில் இடம் பெறுகின்றன.
லிம் சொங் லியோங்: நஜிப்பின் சாதகமான செல்வாக்கு விகிதம் உண்மையில் எனக்கு வியப்பளிக்கிறது. இனஅடிப்படையிலான விகிதம் எப்படி இருந்தாலும் அவரது ஒரே மலேசியா பேரழிவாகும்.