[14.09.2011 – தமிழ்நேசன்]
இந்துக்களை கட்டாய மதமாற்று விவகாரங்களில் சம்பந்தப்படுத்தும் அதிகாரிகளின் அத்துமீறிய செயல்களை மலேசிய இந்து சங்கம் இனியும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்காது என சங்கத்தின் தேசியத் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.
இந்திய மருத்துவக் கல்லூரியில் இடம் : முப்பது இலட்சம் வெள்ளிக்கு மேல் மோசடியா?[14.09.2011 – தமிழ்நேசன்]
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் நாற்பது மாணவர்களிடம் முப்பது இலட்சம் வெள்ளிக்கும் மேல் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுங்கை பூ லோ டேசா கோல்ட்பீல்டை சேர்ந்த முத்து மாணிக்கம் குப்பன் நேற்று இங்கு கெஅடிலான் பொதுப்புகார் பிரிவிடம் முறையிட்டுள்ளார்.
நான் பயப்படவில்லை : அம்பிகா [எம்.கே.வள்ளுவன் – 14.09.2011 – தமிழ்நேசன்]
கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் போலீஸ் கைதுகளையும் மீறி மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பெர்சே 2.0 பேரணியில் கலந்து கொண்டது கண்டு தான் அனம் மகிழ்ந்ததாக பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் டத்தோ எஸ். அம்பிகா குறிப்பிட்டார்.
இங்கு தாமான் யூனிவர் சிட்டி விளையாட்டு மன்ற மண்டபத்தில் செம்பருத்தி தோழர்கள், மலேசியத் தமிழ் நெறிக்கழக ஜொகூர் மாநிலக் கிளை ஆகியவற்றின் ஆதரவுடன் ஜொகூர் மாநில சுவாராம் நட்பு நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த 10-ம் ஆண்டு நிறைவு விழா கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ அம்பிகா சீனிவாசன், இளைஞர்கள் நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக, சுபிட்சமான வாழ்க்கைக்காகப் போராட தயாராக உள்ளனர் என்பதை பெர்சே பேரணி நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.