உங்கள் கருத்து: உண்மையில் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது அதிகார அத்துமீறலா ?

“வாக்காளர்களை அடையாள காண்பதும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதும் அதிகார அத்துமீறல் என நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.”

நோ ஒமார்: சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிப்பீர்

கேகன்: வாக்காளர் பட்டியலை சோதனை செய்வது அதிகார அத்துமீறலா ? அடுத்து விவசாய அமைச்சரும் சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவருமான நோ ஒமார் போன்ற பலவீனமானவர்கள் இது அகோங்கிற்கு எதிரான தேசத் துரோகம் என்று கூடச் சொல்வார்கள். அந்தக் கோமாளிகள் உண்மையில் ஏதோ பெரிதாக ஒன்றை மறைக்கின்றனர்.

உங்கள் அடிச்சுவட்டில்: பொது மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக சில வேளைகளில் குடிமக்கள், குடிமகன் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசும் ஏன் அதனைச் செய்யக் கூடாது ?

ஒரு நல்ல காரியத்தைச் செய்யும் போது அதிகார அத்துமீறல் எங்கே வந்தது ? இது தவறைச் சரி செய்யும் நடவடிக்கையாகும்.

அந்தப் பணியை இசி என்ற தேர்தல் ஆணையம் தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால் அது இதுகாறும் பயனற்றதாக இருக்கிறது. நோ ஒமார் அவர்களே நீங்கள் தூய்மையான கறையில்லாத வாக்காளர் பட்டியலில் உங்களுக்கு விருப்பம் இல்லையா ?

அதனைச் செய்வதில் இசி மந்தமாக செயல்படும் போது அதற்கு உதவ முன்வரும் இன்னொரு அமைப்புக்கு நீங்கள் ஏன் ஆதரவு அளிக்கக் கூடாது ?

நீங்கள் ஏன் அதனை எதிர்க்கின்றீர்கள் என்பது உலகத்துக்கே தெரியும். ஆனால் சில வேளைகளில் உங்கள் சொந்த நலனுக்கு முரணாக இருந்தாலும் மௌனமாக இருப்பது நல்லது என்பது உங்களுக்குத் தெரியாதா ?

நீங்கள் வெல்ல முடியாது. காரணம் நீங்கள் வரலாற்றில் தவறான தரப்பில் இருக்கின்றீர்கள்.

அடையாளம் இல்லாதவன்_4196: நோ அவர்களே, உங்கள் அறிக்கைக்கு அர்த்தமே இல்லை. வாக்காளர் பட்டியலின் உண்மை நிலையை சரி செய்ய சிலாங்கூர் அரசாங்கம் முயலுவது எப்படி தவறாகக் கருதப்பட முடியும் ?

‘bodoh-sombong’ என்பதற்கான அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிகிறது.

டூட்: வாக்காளர்களை அடையாள காண்பதும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதும் அதிகார அத்துமீறல் என நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

குவிக்னோபாண்ட்: அந்த நடவடிக்கையைப் புறக்கணிக்குமாறு சிலாங்கூர் மக்களை நோ ஒமார் கேட்டுக் கொள்ளும் செய்தியை நான் முழுமையாகப் படித்தேன். அவ்வாறு புறக்கணிப்பதற்கு பொருத்தமான காரணம் எதனையும் நான் அதில் காணவில்லை.

அரசு சாரா அமைப்பு ஒன்று வாக்காளர் பட்டியலை சோதனை செய்து குளறுபடிகளை ஆய்வு செய்யும் போது மாநில அரசாங்கம் ஒன்று ஏன் அதனைச் செய்யக் கூடாது ?

ஆவி வாக்காளர்கள் கண்டு பிடிக்கப்பட்டு விடுவர் என்ற அச்சமே நோ ஒமார் நிராகரிப்பதற்கு ஒரே காரணமாக இருக்க வேண்டும். அப்படி என்றால் சிலாங்கூர் அரசாங்கம் சிலாங்கூர் வாக்காளர்களுக்கு சிறந்த சேவை செய்கிறது. அதனை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்.

அர்ச்சன்: தூய்மையான வாக்காளர் பட்டியலைக் கண்டு அம்னோ ஏன் அஞ்சுகிறது எனக்குப் புரியவே இல்லை. பெரும்பான்மை மலேசியர்கள் தன்னை ஆதரிப்பதாக அம்னோ கூறிக் கொள்ளும் போது அது
ஏன் கவலைப்பட வேண்டும் ?

மக்கள் சக்தி: வாக்காளர் அடையாளங்களை சரி பார்ப்பதையும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதையும் சுதந்திரமான நேர்மையான தேர்தல்களை நடத்துவதையும் அம்னோ எதிர்ப்பது வினோதமாக இருக்கிறது.

இந்த நாட்டின் ஜனநாயக நடைமுறைகளுக்கு அம்னோவும் பிஎன்-னும் துரோகம் செய்கின்றன என்ற எண்ணத்தை அது அளிக்கிறது. வழக்கம் போல அந்த அம்னோ தலைவர் பேசுவதில் ஒன்றுமே இல்லை.

பெர்ட்: நோ அவர்களே, வாக்காளர்களுடைய அடையாளங்களை சரி பார்க்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என அந்த மாநில மக்களைக் கேட்டுக் கொள்வதின் மூலம் மோசடி நிகழ்வது உங்களுக்குத் தெரியும் என்பதும் அது அம்பலத்துக்கு வந்து விடும் என நீங்கள் அஞ்சுவதும் தெரிகிறது.

உண்மையில் நீங்கள் கண்ணியமான மனிதரா ? எப்படிப்பட்ட அமைச்சர் நீங்கள் ? கொஞ்சம் கூட நேர்மையே இல்லை. நடப்பு அரசாங்கத்தில் எத்தகைய அமைச்சர் இருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

வெறுப்படைந்தவன்: சிலாங்கூர் வாக்காளர் பட்டியல் தூய்மையாக்கப்படும் வரையிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடக்கும் வரையிலும் மாநிலத் தேர்தலைத் தள்ளி வைப்பதின் மூலம் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அந்த அமைச்சருக்கும் பிஎன்-னுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

பொதுத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என அரசமைப்பு எந்த இடத்திலும் கூறவில்லை.

TAGS: