பெர்சே தொண்டர்மீதான குற்றச்சாட்டைக் கைவிடுக:என்ஜிஓ-கள் வலியுறுத்து

சுவாராமில் இருந்துகொண்டு பயிற்சி பெற்று வருபவரான டான் ஹொங் காய்மீது யுனிவர்சிடி சயன்ஸ் மலேசியாவுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்று சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு என்ஜிஓ-கள் சட்டத்துறை தலைவர்(ஏஜி)அலுவலகத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

50க்கு மேற்பட்ட சமூக அமைப்புகள் அம்மகஜரை ஆதரித்துக் கையொப்பமிட்டிருப்பதாகக் கூறிய சுவாராம் செயல்முறை இயக்குனர் இ.நளினி(வலம்) யுனிவர்சிடி சயன்ஸ் மலேசியா(யுஎஸ்எம்)மாணவர்களின் அழைப்பின்பேரில்தான் டான் அப்பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தார் என்றார்.

“இது சமூகத் தொண்டர்களை மிரட்டும் செயல் என்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் கருதுகிறோம்”.

மகஜரை, பெர்சே இணைத்தலைவர் ஏ.சமாட் சயிட் உள்பட 15பேர் வழங்க ஏஜி அலுவல பொது உறவு அதிகாரி நசுர்டின் மஹமட் பெற்றுக்கொண்டார்.

டான்,யுஎஸ்எம்-முக்குள் அனுமதியின்றி நுழைந்தார் என மே5-இல் குற்றம் சாட்டப்பட்டார்.அவரே, பெர்சே 3.0பேரணி தொடர்பில் முதன்முதலில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 28 பெர்சே பேரணி பற்றிய சுவரொட்டிகளை ஓட்டினார் என்று யுஎஸ்எம் புகார் செய்ததன்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.