தேர்தல் ஆணையம் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களுடன் “கண்ணாம்பூச்சி” ஆட்டம் ஆடுகிறது

“நம்பிக்கையான தவறு ஏதும் நிகழ முடியாத முறை எதுவும் இல்லையா ? ஐயங்களைப் போக்குவதற்கு அரச விசாரணை ஆணையம் தேவைப்படலாம்.”

 

 

 

காணாமல் போன “படியாக்க” வாக்காளர்கள் பாஸ் கட்சியை குழப்புகிறது

வெற்று வேட்டு: குளறுபடிகள் பற்றிய தகவல்களும் அதனை பின்னர் தேர்தல் ஆணையமும் தேசியப் பதிவுத் துறையும் நீக்குவதும் வேதனை அளிக்கிறது. அந்த இரண்டு அமைப்புக்களின் கணினி முறை மீது மக்கள் நம்பிக்கை சரிந்து விட்டது.

நம்ப முடியாத தகவல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சுட்டிக் காட்டப்பட்டதும் அதனை சம்பந்தப்பட்ட துறைகள் நீக்கி விடுகின்றன. இது போன்ற “தீயணைப்பு” பணிகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

நம்பிக்கையான தவறு ஏதும் நிகழ முடியாத முறை எதுவும் இல்லையா? ஐயங்களைப் போக்குவதற்கு அரச விசாரணை ஆணையம் தேவைப்படலாம். வாக்காளர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இயல்பாகவே வாக்காளர்களாக பதிவு செய்யப்படும் முறையும் தேவை.

அடையாளம் இல்லாதவன்_3da6: அவற்றை தேர்தல் ஆணையம் வெகு விரைவாகக் காணாமல் போகச் செய்ய முடியமானால் அவற்றை மீண்டும் வாக்களிப்பு நாளில் சேர்க்க இயலும். அப்போது அவற்றைச் சோதிப்பதற்கு நமக்கு நேரம் இருக்காது.

தேசிய புள்ளி விவரக் களஞ்சியம் முழுமையாக சீரழிந்துள்ளது. அது எவ்வளவு துல்லிதமானது? தேர்தல் தினத்தன்று பயன்படுத்தப்படும் பட்டியலை நான் நம்பப் போவதில்லை. தவறுகளை சரி செய்வதற்குப் பதில் நாம் சாக்குப் போக்குகளையே அதிகமாக செவிமடுக்கிறோம்.

ஹலோ: தேர்தல் ஆணையமும், தேசியப் பதிவுத் துறையும் விருப்பம் போல் பெயர்களைச்  சேர்க்கின்றன. நீக்குகின்றன. அவற்றை யாரும் கண்காணிப்பது இல்லை. தங்கள் “குளறுபடிகளுக்கு”  நேர்மையான விளக்கத்தை வழங்கக் கூட அவை தயாராக இல்லை. அவ்வளவு அகங்காரம்.

கேகன்: சினார் ஹரியான் கண்டு பிடித்ததாகக் கூறப்படும் “படியாக்கங்கள்” உண்மையானவை அல்ல என்பது அதன் அர்த்தமா ? பொது மக்களுடைய கண்களை மறைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமா?

வெறுப்படைந்தவன்: அப்துல் ரசாக் பகிந்தா வழக்கில் அல்தான் துயா ஷாரிபுவும் அவரது உறவினரும் இந்த நாட்டுக்குள் வந்த குடிநுழைவுப் பதிவுகளே காணாமல் போயுள்ளன. சுட்டிக் காட்டப்பட்ட பின்னர் தேசியப் பதிவுத் துறை, தேர்தல் ஆணையப் பதிவுகள் காணாமல் போகின்றன.

இது எல்லாம் தேர்தல் ஆணையம் காட்டுகின்ற மாயாஜாலம். “இப்போது நீங்கள் பார்க்கின்றீர்கள் இப்போது நீங்கள் பார்க்க முடியாது.” வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கேலிப் பொருளாக்கி விட்டது. தேர்தல் ஆணையம் மீதும் அதன் எஜமானரான பிஎன் மீது நெருக்குதல் தொடுக்க பெர்சே 3.0 அவசியமாகும்.

இரண்டு காசு மதிப்பு: தேர்தல் ஆணையம் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுகிறது. நீங்கள் படியாக்கங்களைக் கண்டு பிடித்தால் நாங்கள் மறைத்து வைத்து விடுவோம்.

தேசியப் பதிவுத் துறை மீதும் அரச விசாரணை ஆணையம் தேவை

குழப்பம் இல்லாதவன்: முழுக்க முழுக்க சீர்குலைவுதான். நான் வெளிநாட்டுக்காரன். இந்த ஊழல் அரசாங்கமும் அதற்கு அடிபணியும் அரசாங்க ஊழியர்களும் தலையில்லாத கோழிகளைப்போன்று அலைந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பது நல்ல வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிற பல விஷயங்கள் எங்களைப் போன்றவர்களுக்குத் தெளிவாக புரியும்போது இன்னும் விழித்துக் கொள்ளாத இந்த நாட்டு மக்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன்.

டாரெல் டாமியன்: அந்த விஷயத்தில் அவர்கள் அரச ஆணையத்தை அங்கீகரிப்பார்கள் என நான் நம்பவில்லை.

TAGS: