பத்தாயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்!

[15.09.2011 – தமிழ்நேசன்]

போலி மை கார்டுகளை வைத்திருந்த 10,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், கடந்த இரண்டு மாதங்களில் வாக்காளர் பட்டியலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

அந்தத் தகவலை ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்சான் காயாட் நேற்று வெளியிட்டார்.

அவர் அண்மைய காலமாக வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்ற குளறுபடிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

தேர்தல் ஆணைய இணையத் தளத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதால் தாம் பெரிய மாற்றத்தைக் கண்டு பிடித்ததாக அவர் கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அவ்வாறு அகற்றப்பட்டவர்களில் ஒரே பெயரைக் கொண்ட ஆனால் மை கார்டு எண்களில் மட்டும் சிறதளவு மாற்றத்தைக் கொண்ட வாக்காளர்களும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டும் தேர்தல் ஆணைய இணையத்தளத் தோற்றத்தை அவர் நிருபர்களிடம் காண்பித்தார்.