‘நாங்கள் பென்சிலைக் கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தத் தயாராக இருக்கிறோம்’

“பிஎன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. அதனை வீழ்த்துவதற்கு தண்ணீர் போத்தல்கள் தேவையில்லை. வாக்குச் சீட்டில் பென்சிலைக் கொண்டு கோடு போட்டால் போதும்.”

தண்ணீர் போத்தல்கள் கூட அரசாங்கத்தை வீழ்த்த முடியும் என்கிறார் நஸ்ரி

குவிக்னோபாண்ட்: பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் புத்திசாலியாக நடந்து கொள்ள முயலுகிறார். ஆனால் எல்லாம் தவறாகவே முடிந்து விடுகிறது.

முதலாவதாக எகிப்தில் உருவான அரபு எழுச்சி அமைதியானது. அதற்காக கைத் தொலைபேசிகளுக்கு நன்றி கூற வேண்டும்.

இரண்டாவதாக அமைச்சர்களை நீக்க வேண்டும் என பெர்சே கோரவில்லை. மாறாக அது தூய்மையான தேர்தல்களையே நாடுகிறது.

எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆட்டக்களத்தில் சமநிலை கொடுக்கப்பட வேண்டும் என அது சொல்வதில் என்ன தவறு ?

தாங்சிட்: மக்கள் ஆதரவு அரசுக்கு இருந்தால் வீழ்த்தப்படலாம் என அது கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

மக்கள் ஆதரவு அரசுக்கு இல்லை எனவும் அதிகாரத்தை இழக்க அது அஞ்சுகிறது எனவும் நஸ்ரி சொல்வதாகத் தோன்றுகிறது. அதனால் தண்ணீர் போத்தல்களை வைத்துள்ள மக்களைக் கண்டு கூட பயப்படும் அளவுக்கு அரசாங்கம் சென்று விட்டது.

மே: அதிகார வர்க்கம் மக்களுடன் ஒத்துப் போனால் அதனை யாரும் வீழ்த்த முடியாது. உப்பும் தண்ணீர் போத்தல்களும் கூட ஒன்றும் செய்ய முடியாது.

முதலில் மறுப்பது, அடுத்து பொய் சொல்வது, இப்போது அரசியல் குண்டர்தனம் உட்பட வன்முறைகள் அடுத்து என்ன ?

நமது அரசாங்க அமைப்புக்கள் பொது மக்களுடைய குறைகளுக்கு செவிசாய்க்காமலும் தங்கள் திறனை மேம்படுத்த முயற்சிக்காமலும் இருக்கும் வேளையில் மற்றவர்கள் மீது பழியைத் திருப்பி விடுவதிலேயே குறியாக இருக்கின்றன.

அத்தகைய போக்கைக் கொண்ட அரசு ஊழியர்களை நாம் தொடர்ந்து வேலைக்கு அமர்த்தினால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இல்லை.

அன்ஸ்பின்: நஸ்ரி அவர்களே, பெர்சே வலியுறுத்துவது போல நமது வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு அனுமதிக்கும் துணிச்சல் உங்களுக்கு இருந்தால் எங்களில் பலர் பென்சிலைக் கொண்டு அரசாங்கத்தை வீழ்த்த காத்திருக்கிறோம்.

பெர்சே 3.0-ஐயும் அரபு எழுச்சியையும் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். காரணம் பெரும்பாலான மலேசியர்கள் ( அம்னோ மாட் ரெம்பிட்டுக்கள், பெர்க்காசா கோமாளிகள் தவிர) நமது அரசாங்கம் நேர்மையாகவும் ஜனநாயக ரீதியிலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

கண்டபிரிகியான்: தண்ணீர் போத்தல்களா ? தயவு செய்து சொல்ல வேண்டாம்.  பிஎன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. அதனை வீழ்த்துவதற்கு தண்ணீர் போத்தல்கள் தேவையில்லை. வாக்குச் சீட்டில் பென்சிலைக் கொண்டு கோடு போட்டால் போதும்

அடையாளம் இல்லாதவன் #18452573: எந்த ஒரு நாட்டிலும் குடிமக்கள் ஏன் தங்கள் அரசாங்கத்தை வீழ்த்த முயல வேண்டும் ?

நஸ்ரி சொல்லும் நாடுகள் அனைத்தும் ஒரு காலத்தில் ஜனநாயக நாடுகளாக இருந்தவை. பின்னர் சர்வாதிகார ஆட்சிகளாக மாறியவை. குடிமக்களுடைய சேவகர்களாக அவை இயங்கவில்லை.

தில்லுமுல்லு, மோசடிகள், ஏன் கொலைகள் மூலமாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்ற ஊழல் தலைவர்களை அவை பெற்றிருந்தன. வாக்களிப்பு முறையில் மோசடிகள் நிறைந்திருந்ததால் மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் பெற போராடினர்.

நமது அரசாங்கத்திற்கும் மற்ற அந்த ஆட்சிகளுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக எண்ணிக் கொண்டு நஸ்ரி அந்த நாடுகளை குறிப்பிட்டுள்ளது வினோதமாக இருக்கிறது.

 

TAGS: