டாக்டர் மகாதீர் மீண்டும் அச்சத்தை விதைக்கிறார்

உண்மையில் மலாய்க்காரர்கள் பெரிதும் மறி விட்டனர். மகாதீருடைய போலித்தனத்தை அவர்கள் இப்போது நன்கு அறிந்துள்ளனர்.”

டாக்டர் மகாதீர்: சீர்திருத்தங்கள் பதற்றத்தை உருவாக்கக் கூடும்

வெறும் பேச்சு: ஆம். டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, சீர்திருத்தம் இந்த நாட்டுக்கு நல்லதல்ல. ஊழல் மலிந்த அம்னோ அரசாங்கத்தின் கீழ் மலேசியா மேலும் மேலும் சீரழிய அனுமதிப்பது தான் சிறந்த வழியாகும்.

சீர்திருத்தம் இந்த நாட்டுக்கு நல்லதல்ல. காரணம் அரசுக்குச் சொந்தமான பெட்ரோனாஸ் நிறுவனம் வைத்துள்ள ரொக்கக் கையிருப்பைப் பயன்படுத்த பிரதமருக்கு உள்ள அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

அந்நியக் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏபி என்ற அங்கீகரிக்கப்பட்ட அனுமதி முறையை சீர்திருத்துவதும் நல்லதல்ல. ஏனெனில் அவ்வாறு செய்தால் அவரது புதல்வர் முக்ரிஸ் நல்ல ஆதாய வழியை இழந்து விடுவார்.

மகாதீர் அவர்களே 1981 முதல் நீங்கள் மலேசியாவை ஏமாற்றி வந்துள்ளீர்கள். தயவு செய்து ஒய்வு பெறுவதின் மூலம் மலேசியர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்கள் சேவகர்கள் மட்டுமே உங்களுக்குச் செவி சாய்ப்பார்கள். ‘பெர்சே’ மலேசியர்கள் அல்ல.

ஏபி சுலைமான்: 2003ல் ஒய்வு பெற்ற போது மகாதீர், மலாய்க்காரர்களை மாற்ற முடியாமல் போனது தான் பிரதமர் என்ற முறையில் தாம் அடைந்த பெரிய தோல்விகளில் ஒன்று எனச் சொன்னார்.

மலாய்க்காரர்களை மாற்றுவதும் பரந்த சிந்தனை உடையவர்களாக மாற்றுவதும் இனப் பதற்றத்துக்கு வழி வகுக்கும் எனக் கூறி அவர்களை மாற்றக் கூடாது என அவர் இப்போது சொல்கிறார்.

மலாய்க்காரர்களை பழமைப் போக்கிலேயே விட்டு விட வேண்டும் என அவர் விரும்புவதாகத் தோன்றுகிறது. உண்மையில் மகாதீருடைய நேர்மாற்றம் வியப்பளிக்கிறது.

உண்மையில் மலாய்க்காரர்கள் பெரிதும் மாறி விட்டனர். மகாதீருடைய போலித்தனத்தை அவர்கள் இப்போது நன்கு அறிந்துள்ளனர். அதனால் தான் அவர் மலாய்க்காரர்கள் ஏதுமறியாத முன்னைய நிலைக்குத் திரும்பப் போக வேண்டும் என விரும்புகிறாரோ என்னவோ ?

கெட்டிக்கார வாக்காளர்: இனப் பதற்ற நிலை எனக் கூறப்படுவது எல்லாம் பிரித்து ஆளும் பிஎன் பழைய தந்திரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஊழலையும் லஞ்சத்தையும் மோசடிகளையும் முறியடிப்பதற்கு அனைத்து இன மலேசியர்களுடைய இணக்கத்தையும் பெறுவதற்குக் காலம் கனிந்து விட்டது.

காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை வெளியிட்டு வரும் மகாதீர் மீது மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகின்றது.

ஒரு காலத்தில் சிறந்த நாடாகத் திகழ்ந்த நம் நாட்டை நலிவடையச் செய்து விட்ட பல பிணிகளை போக்குவதற்கு நாடு வாக்களிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஸ்விபெண்டர்: மகாதீர் அவர்களே, மலேசியர்களுடைய ஜனநாயக அவாக்களை முறியடிப்பதற்கு நீங்கள் எப்போதும் இனப் பதற்றம் ஏற்படும் என்ற அச்சத்தை மூட்டி வந்துள்ளீர்கள்.

சீர்திருத்தங்களைக் கண்டு மலேசியர்கள் ஏன் அஞ்ச வேண்டும் ? மலாய்க்காரர் அல்லாதார் மட்டுமே சீர்திருத்தங்களை விரும்புவதாகவும் அதனை மலாய்க்காரர்கள் எதிர்க்க வேண்டும் என்றும் நீங்கள் சொல்கின்றீர்கள். காரணம் சிறந்த மலேசியாவுக்கான சீர்திருத்தங்கள் மலாய்க்காரர்களுக்கு நல்லதல்ல என நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்.
 
மலேசியர்கள் என்ற முறையில் மலாய்க்காரர் அல்லாதாருக்கு சம உரிமைகளைக் கொடுத்தால் மலாய்க்காரர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவர் என மலாய்க்காரர்கள் மனதில் 22 ஆண்டுகளாக நீங்கள் ஊட்டி வந்துள்ளீர்கள்.

அடையாளம் இல்லாதவன்_3f4a: மகாதீர் பேசுவது எல்லாம் அபத்தம். சீர்திருத்தங்கள் பதற்றத்தை தடுக்குமே தவிர மூட்டாது. நாட்டின் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறியாமல் அவர் இன்னும் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பல தசாப்தங்களுக்கு நீடித்து விட்ட சர்வாதிகார ஆட்சிகளிடமிருந்து இளைய தலைமுறை கூடுதலாக கோரியதால் அரபு எழுச்சி மூண்டது.

அது ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையில் நிகழ்ந்த வர்க்கப் போராட்டமாகும். மாற்றங்களைத் தவிர்க்க முடியாது.

உலகம் முழுவதும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனை அம்னோ தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டு நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே மகாதீருடைய அச்சத்திற்கு ஆதாரமே இல்லை. 1970களின் அனுபவங்கள் அடிப்படையில் அவர் பேசுகிறார்.

 

TAGS: