“அது முழுக்க முழுக்க பாதுகாப்பானது என கல்வி கற்ற நமது அறிவியலாளர்கள் சொல்கின்றனர். ஆகவே அதனை ஆஸ்திரேலியப் பொது மக்களிடமே அதனை திரும்ப விட்டு விடுவோம்.”
அறிக்கை: லினாஸுக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியைக் கொடுங்கள்-அது பேராபாயத்தைக் கொண்டிருக்கவில்லை
அடையாளம் இல்லாதவன் #47094963: நாம் மிகவும் சம முக்கியத்துவம் கொண்ட ஒரு விஷயத்திலிருந்து திசை மாறி விடக் கூடாது – அது தான், அந்தத் தொழில் கூடம் வெளியாக்கும் கழிவுப் பொருட்கள்.
“தேவை ஏற்படும் போது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக அந்தக் கழிவுகளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லுமாறு நாம் ஆஸ்திரேலியர்களை கட்டாயப்படுத்த வேண்டும்.
அவை முழுக்க முழுக்க பாதுகாப்பானது என கல்வி கற்ற நமது அறிவியலாளர்கள் சொல்வதால் ஆஸ்திரேலியர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?
ஆகவே அதனை ஆஸ்திரேலியப் பொது மக்களிடமே அதனை திரும்ப விட்டு விடுவோம். பின்னர் லினாஸ் ஆஸ்திரேலியா அதனை எப்படி ஆஸ்திரேலியர்களுக்கு விளக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
விசுவாசமான மலேசியன்: அந்த முடிவு கொஞ்சம் கூட வியப்பளிக்கவில்லை. தங்கள் அரசியல் எஜமானர்கள்செய்த முடிவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் ரப்பர் முத்திரையைப் போட்ட அந்த நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு கெபெங்கில் வாழப் போகும் எதிர்காலத் தலைமுறையினர் சாபம் போடுவர் என நாம் நம்பலாம்.
மாற்றத்துக்கான நேரம்: எல்லா பிஎஸ்சி உறுப்பினர்களுக்கும் மூளையே இல்லை. அவர்கள் பேசுவது எல்லாம் குப்பை.
ஆஸ்திரேலியாவில் அந்தத் தொழில் கூடம் கட்டப்படுவதை அந்த நாடு விரும்பவில்லை. அந்தத் தொழில் கூடம் மக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது என்பதை கல்வி கற்காத மக்களுக்குக் கூடத் தெரியும்.
ஊழல் மலிந்த அம்னோ அம்னோவும் பிஎன்-னும் மட்டுமே மக்கள் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அவற்றுக்கு லினாஸ் தங்கள் பைகளில் எவ்வளவு பணம் போடுகிறது என்பது தான் முக்கியம்.
உங்கள் அடிச்சுவட்டில்: அந்த அரிய மண் தொழில் கூடத்தின் பாதுகாப்பு அம்சம் முழுமையாக ஆராயப்படாதசூழ்நிலையில் அதன் கட்டுமானம் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா ?
பிஎன் அரசாங்கமும் அந்நிய முதலீட்டாளர்களும் இப்படித் தான் இயங்குகின்றனர்- சுற்றுச் சூழல் மீது ஏற்படக் கூடிய தாக்கம் பாதுகாபு பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.
கட்டுவதும் பணம் பண்ணுவதும் தான் முதல் வேலை. மற்றதைப் பற்றி அக்கறை கொள்வதே இல்லை.
12வது பொதுத் தேர்தலில் நடந்தது நல்லதாக போய் விட்டது. இப்போது ஒவ்வொரு விஷயமும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.
நியாயமானவன்: லினாஸ் அந்த கதிரியக்கக் கழிவுப் பொருட்கலை எப்படி அகற்றப் போகிறது என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள். அந்தத் தொழில் கூடத்திலும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் விபத்து நிகழாது என்பதை உறுதி செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ?
லிம் சொங் லியோங்: பிடிபிடிஎன் கடனை முடக்கி குழப்பம் செய்த முகமட் காலித் நோர்டின், வழக்குரைஞர் மன்ற கருத்தரங்கில் அத்துமீறி நுழைந்த சுல்கிப்லி நூர்டின்.
அந்த பிஎஸ்சி உறுப்பினர்கள் அம்னோ அடிவருடிகள். அவர்களுடைய முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அது இரசாயன தொழில் கூடமாக அல்லது அணு தொழில் கூடமான இருந்தால் என்ன- அதனால் அவை குறைந்த அபாயத்தைக் கொண்டுள்ளனவா ? அவர்கள் சைனாய்ட் அல்லது மெர்குரி அல்லது காரீயம் அல்லது தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பொருட்கள் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையா ?
நாம் அனுமதித்தால் நமது ஆன்மாக்களைக் கூட அம்னோ விற்று விடும்.
ஏஸ்: நிச்சயமாக அது பாதுகாப்பானது தான். ஏனெனில் பிஎஸ்சி உறுப்பினர்கள் அங்கு வேலை செய்யவில்லை. வசிக்கவும் இல்லை. அந்தத் தொழில்கூடம் மலேசியாவில் இருப்பதால் அது பாதுகாப்பானது என ஆஸ்திரேலியர்கள் நிச்சயம் கூறுவார்கள்.