நிலைத்தன்மையை சீர்குலைப்பது அரசியல்வாதிகளே, மக்கள் அல்ல

“மக்கள் வாழ்க்கையை சிரமமாக்குவதற்கு இனவாத, திறமையில்லாத, ஊழல் அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும்.”

நஜிப்: பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் நிலைத்தன்மை அவசியம்

உங்கள் அடிச்சுவட்டில்: வணிகர்கள், பணக்காரர்கள் மட்டுமின்றி எல்லோருமே நிலைத்தன்மையை விரும்புவதாக நான் எண்ணுகிறேன். அரசியல் நிலைத்தன்மைக்கு பல அம்சங்கள் முறையாக இயங்க வேண்டும். நடப்பு அரசாங்கம் திறமையில்லாதது எனத் தெரிய வந்தால் அது விலகிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே உங்கள் வாதத்தைச் சரி செய்து கொள்ளுங்கள். அரசியல் நிலைத்தன்மை சீர்குலைவதற்கு காரணம் அரசாங்கமே தவிர மக்கள் அல்ல.

நம்மைச் சுற்றிப் பாருங்கள். பொறுப்பற்ற அரசாங்கங்கள், ஊழல் அரசாங்கங்கள், திறமையற்ற அரசாங்கங்கள் ஆகியவை ஏமாற்றுவதையும் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்வதையும் பார்க்க முடியும்.

நிலைத்தன்மை சீர்குலைவதற்கு அவையே மூல காரணம். அவை மக்களுடைய சேமிப்பைக் கரைக்கின்றன. அவர்கள் வாழ்க்கையை சிரமமாக்குகின்றன.

கேஎஸ்என்: உங்கள் கருத்தை யாரும் எதிர்க்கப் போவதில்லை. முதலீட்டாளர்களுக்கும் வளர்ச்சிக்கும் அரசியல் நிலைத்தன்மை மிக அவசியமாகும்.

அதே வேளையில் நாட்டை வழி நடத்துவதற்கு நேர்மையான, திறமையான, ஊழல் இல்லாத அரசியல்வாதிகள் தேவை என்பதையும் நீங்கள் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும்.

அம்னோ பாரு/பிஎன் ஆகியவற்றில் கடந்த 30 ஆண்டுகளாக அத்தகைய நல்ல ஆண்களும் பெண்களும் குறைவாக இருக்கின்றனர். அது போன்ற மனிதர்களும் அவற்றில் தென்படவில்லை.

மாற்றம்: அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசும் நமது திருவாளர் அவர்களுடைய மருட்டலுக்கு சீன வணிகர்கள் அனைவரும் எளிதில் பணிந்து விட மாட்டார்கள்.

பெண்டர்: நஜிப்பையும் அவரது ஊழல் வழிகளையும் நான் வெறுத்தாலும் இந்த விஷயத்தில் நான் அவர் கருத்தை ஒப்புக் கொள்கிறேன். அரசியல் நிலைத்தன்மை பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமாகும்.

அந்தக் கருத்துக்கு தற்போது பினாங்கு, கெடா, சிலாங்கூர் ஆகியவற்றில் நடப்பதை நாம் துணிந்து ஆதாரமாகக் காட்டலாம்.

அரசியல் நிலைத்தன்மை- உறுதியான, திறமையான, ஊழல் இல்லாத அரசாங்கம் ஆகியவை பக்காத்தான் அந்த மாநிலங்களை எடுத்துக் கொண்டது முதல் பொருளாதார வளப்பத்துக்குப் பெரிதும் உதவியுள்ளன.

அத்தகைய நிலைத்தன்மை, பொருளாதாரத்துக்கு மட்டுமின்றி சமூக, சமய அம்சங்களிலும் (அதற்கு கிளந்தான் நல்ல எடுத்துக்காட்டு)  முக்கியப் பங்காற்றுகிறது.

ஆகவே பிரதமரது கண்ணோட்டத்தை மனதில் கொண்டு மாற்றங்களைச் செய்வோம். பொருளாதார, சமூக வளப்பத்துக்காக வரும் தேர்தலில் இனவாத, திறமையில்லாத, ஊழல் பிஎன் அரசாங்கத்தை வீழ்த்தி அதற்குப் பதில் பக்காத்தான் அரசாங்கத்தை அமர்த்துவோம்.

ஜெபர்சன்76: அரசாங்கம் எப்போதும் மாறி மாறிப் பேசும் போது நிலைத்தன்மை எப்படி வரும் ?

லிம் சொங் லியோங்: பிஎன் ஆட்சியில் நாம் பெற்றுள்ள உறுதியற்ற சூழ்நிலகள் என்ன ? பிஎன்-னும் பிரதமரும் ஊழலாக இருப்பதா ? மூத்த அம்னோ ஜமீந்தார்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் விசாரிக்கப்படாமல் போவதா ?

அம்னோ இனவாத சமயவாத உணர்வுகளைத் தூண்டுவதா ? சட்டவிரோதமாக பெரும் பணத்தை அம்னோ நாட்டை விட்டு வெளியேற்றியதா ?

அம்னோபுத்ராக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் தங்களைப் பற்றிக் கேள்வி எழுப்புகின்றவர்கள் மீது வழக்குப் போடவும் அரசாங்கத்தின் சட்ட ஒழுங்கு எந்திரத்தைப் பயன்படுத்துவதா ?

மற்ற பிஎன் பங்காளிக் கட்சிகளும் அதே போன்ற ஊழல்வாதிகள், வாய் பேசாத ஊமைகளா ?

இத்தகைய சூழ்நிலையில் அரசியல் பொருளாதார நிலைத்தன்மைக்கு பக்காத்தான் சிறந்த தேர்வாக அமையும் என நான் நம்புகிறேன்.

 

TAGS: