பெர்க்காசா விரும்புவது ஒரே மலேசியாவா அல்லது ஒரே மலாய்-சியாவா ?

‘நாம் அரசமைப்பை வாசிக்காமல் நாம் ஒரே மலேசியா பற்றியும் அரசமைப்பும் பற்றிப் பேசுவதால் என்ன நன்மை விளையப் போகிறது ?’

‘பெர்க்காசாவும் ஒரே மலேசியாவும் ஒன்றுக்கு ஒன்று முரண்படவில்லை’

சாடிரா: நீங்கள் எல்லாவாற்றையும் இனவாதக் கண்ணாடியில் பார்த்தால் பெர்க்காசாவும் ஒரே மலேசியாவும் ஒன்றாகத் தான் தோன்றும். என்றாலும் ஒரே மலேசியா என்பது ஒர் இனத்தைக் காட்டிலும் அதிகமாக சிந்திக்கிறது. அது மலேசியராக இருப்பது பற்றியதாகும். அது பெர்க்காசா போராடும் விஷயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். ஹிண்ட்ராப்புக்கும் டோங் ஜோங்-கிற்கும் அது பொருந்தும்.

இதில் வருத்தமளிக்கும் அம்சம் என்னவெனில் ஒரே மலேசியாவை மேம்படுத்த வேண்டிய தலைமைத்துவம் இன வம்சாவளி எல்லையிலும் சிந்தனையிலும் சிக்கிக் கொண்டிருப்பதாகும். நாம் முதலில் நம்மை மலேசியர்களாகப் பார்க்க வேண்டும். எல்லா மலேசியர்களும் சரியானதை செய்ய வேண்டும். பெர்க்காசா வலியுறுத்துவது அது அல்ல. அந்த வகையில் இரண்டுக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது.

கேஎஸ்என்: இன்னும் உயிருடன் இருக்கின்ற நாட்டு நிர்மாணிப்புக்கு பங்காற்றி வருகின்ற ஒருவருக்கு இந்தியர் பாணியிலான நல்லடக்க சடங்குகளை அவரது வீட்டுக்கு முன்னால் நடத்துவது பற்றி என்ன சொல்வது ?  பெர்க்காசா போராடும் ஒரே மலேசியா இது தானா ?

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு எதிராக நடத்திய கோமாளிக் கூத்தை என்னவென்று சொல்வது ? அதுவும் பெர்க்காசா போராடும் ஒரே மலேசியாவா ?

பெர்க்காசா போன்ற தோழர்கள் இருக்கும் வரையில் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் அம்னோ பாருவுக்கும் வேறு எதிரிகளே தேவையில்லை.

அது இருக்கட்டும். நீங்கள் எந்த அரசமைப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? அது மலேசிய அரசமைப்பா ?

ஒய்எச்ஜே.: மலாய்க்காரர்கள் மருட்டப்படுவதால் பெர்க்காசா அமைக்கப்பட்டது என நீங்கள் ஏன் எண்ணுகின்றீர்கள் ? அரசாங்கத்தில் உள்ள எல்லா உயர் பதவிகளும் மலாய்க்காரர்களிடம் இல்லையா அல்லது அரசாங்கக் கொள்கைகள் அனைத்தும் பூமிபுத்ராக்களுக்குச் சாதகமாக இல்லையா ?

நீங்கள் ஏன் பொதுவான தோற்றத்தை பார்த்து நாட்டின் விரிவான நன்மைக்காக பாடுபடக் கூடாது ? ஒர் இனப் பிரச்னையில் மட்டும் மூழ்கிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து விடுங்கள்.

ஆனால் மலேசியாவில் அரசியல் என்பதே இன அடிப்படையிலானது. உண்மையில் பல கொள்கைகள் இன ஒதுக்கலை சாராம்சமாகக் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் மலேசியர்கள் என்ற முறையில் ஒன்றுபடுவதைக் காண விரும்பவில்லை. அத்தகைய அரசியல்வாதிகளை நாம் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.

ஸ்விபெண்டர்: ‘மலாய் மேலாண்மை’, ‘சமூக ஒப்பந்தம்’ என அரசமைப்பில் எந்த இடத்தில்  குறிக்கப்பட்டுள்ளது ? அது உங்களுடைய விளக்கமே. ஒரே மலேசியாவா அல்லது ஒரே மலாய்-சியாவா ? தேர்வு உங்களுடையது.

சியூ ஹோ சியூ: நிச்சயமாக வேறுபாடு இல்லை. அரசாங்கக் கருத்துக்களும் பெர்க்காசா எண்ணங்களும் ஒன்றே. அது தான் ஒர் இன மலேசியா (1-kaum Malaysia)

ஏபிகே: நாம் அரசமைப்பை வாசிக்காமல் நாம் ஒரே மலேசியா பற்றியும் அரசமைப்பும் பற்றிப் பேசுவதால் என்ன நன்மை விளையப் போகிறது ?

சொந்த லாபத்திற்காக நாட்டின் தற்காப்பு ரகசியங்கள் விற்கப்படும் போது நீங்கள் எந்த உரிமைக்காக போராடுகின்றீர்கள் ? அது குறித்து எந்த மலாய் போராட்டக்காரரும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே ?

உங்கள் போராட்டத்தை சலுகைகளும் உதவிகளும் தேவைப்படுகின்ற  கிராமப்புற மக்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் கொண்டு செல்லுங்கள். அவர்கள் சௌகரியமாக வாழ உதவுங்கள். சுய லாபத்திற்காகப் போராடும் ஒர் அரசு சாரா அமைப்பு என்பது உங்கள் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறது.

 

TAGS: