புதிய பாதுகாப்புச் சட்டம் ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு’

“புண்படுத்தக் கூடிய விதிகளை நீக்கி விட்டதாக அவர்கள் சொல்கின்றனர். ஆனால் அவை இன்னொரு வழியில் தயாரிக்கப்பட்ட வாசகங்கள் மூலம் உள்ளுக்குள் ஊடுருவி விட்டன.”

புதிய பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் ‘மேலும் ஆபத்தானவை’

செஞ்சுரியோன்: ‘போலி ஜனநாயகவாதியின்’ அரசாங்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த நாட்டு ஏறத்தாழ போலீஸ் இராஜ்யமாகி விட்டது.

அரசாங்கத்தை அதாவது அம்னோவைப் பொறுத்த வரையில் மக்கள் உதவாக்கரைகள். அந்த கொடூரமான சட்டம் புதிய மொந்தையில் கொடுக்கப்படும் பழைய கள்ளு.

எல்லாம் குப்பை: எந்த விஷயத்தில் அம்னோவான பிஎன் அரசாங்கம் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது ? மலேசியர்கள் அனைவரும் முட்டாள்கள், கல்வி அறிவு இல்லாதாவர்கள் என அது எண்ணுகிறது.

ஒரு பக்கத்தில் புண்படுத்தக் கூடிய விதிகளை நீக்கி விட்டதாக அவர்கள் சொல்கின்றனர். ஆனால் அவை இன்னொரு வழியில் தயாரிக்கப்பட்ட வாசகங்கள் மூலம் உள்ளுக்குள் ஊடுருவி விட்டன.

55 ஆண்டுகளுக்குப் பின்னர் அதனை உதைத்து வெளியே அனுப்புவதற்கு போதுமான விழிப்புணர்வையும் விவேகத்தையும் மலேசியர்கள் பெற்று விட்டதாக நம்புவோம்.

அடையாளம் இல்லாதவன்#74150739: அவர்களுடைய ஆயுதங்கள் அனைத்தையும் 13வது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் மீதே பயன்படுத்துவோம். அடுத்து அதனை ரத்துச் செய்வோம். இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னரும் கூட இசா கைதிகள் தடுத்து வைக்கப்படுவதைப் போன்று அவர்களையும் தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும்.

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எத்தனை பிஎன் எம்பி-க்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இக்கட்டான சூழலில் இருக்கப் போகின்றனரோ ?

பிளையண்ட் பிரடோ: தாங்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்யப் போவதாக பிகேஆர் நமக்கு வாக்குறுதி அளித்துள்ளது.

அது கிஞ்சித்தும் சிந்திக்காமல் இலவசக் கல்வியை வழங்குவதாகவும் பாலஸ்தீனர்களுக்கு உதவி அளிப்பதாகவும் அது உறுதி கூறியுள்ளது.

வீரா: உறுதியான காரணம் இல்லாமல் யாரையும் தடுத்து வைக்க வகை செய்யும் சட்டமும் அதனை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ளவர்களே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற சட்டமும் ரத்துச் செய்யப்பட வேண்டும்.

சித்தரவதையும் கட்டாயப்படுத்தில் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதும் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும்.

 

 

TAGS: