“அம்பிகாவைத் தூக்கில் போடுங்கள் போன்ற மடத்தனமான அறிக்கைகள் உண்மையில் வெறுப்பைத் தருகின்றன. நல்ல சிந்தனை உடைய மலேசியர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள்.”
‘அம்பிக்கவைத் தூக்கில் போடுங்கள் என்பது பிஎன் நிலைப்பாடு அல்ல’
ஜெரோனிமோ: என் புதல்வர் அண்டை வீட்டுக்காரர் மீது அவதூறான சொற்களை பயன்படுத்தி, அது குறித்து அண்டை வீட்டுக்காரர் என்னிடம் புகார் செய்தால் அது எங்கள் குடும்ப நிலப்பாடு அல்ல, என் புதல்வர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விவகாரம் அல்ல என நான் அவரிடம் சொல்வேனா அல்லது என் குடும்பத்தின் நல்ல பெயரைக் காப்பாற்ற என் புதல்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேனா ?
அதே கூற்றுத் தான் இதற்குப் பொருந்தும். அது அம்னோ நிலை இல்லை என்றால் அந்த ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜீஸ் அந்தக் கருத்தை வெளியிட்ட போது ஏன் மற்ற அம்னோ உறுப்பினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர் ?
தயவு செய்து பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மான்சோர் அவர்களே, பூசி மெழுக வேண்டாம். அது தான் அம்னோ நிலை. காரணம் உங்களுக்கு வன்முறையில் நாட்டமுள்ளது. அது உங்கள் கட்சியின் மரபணுவைக் காட்டுகின்றது.
சுவாத்: அந்த விவகாரம் மீது மஇகா தலைவர் ஜி பழனிவேல் தெளிவாகக் கருத்துரைத்துள்ளார். அது இனவாத நிலை என தெங்கு அட்னானைக் காட்டிலும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பிஎன் சொல்லாதது தான் மிக முக்கியமானது. தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கோரிக்கை மாமன்னருக்கும் நாட்டுக்கும் எதிரான துரோகம் என அது சொல்லவில்லை. ஏனெனில் அது அரசமைப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது.
ஆகவே தூய்மையான நியாயமான தேர்தல்கள் மீது பிஎன் நிலைப்பாடு என்ன ?
ஜெரார்ட் லூர்துசாமி: அது பிஎன் நிலைப்பாடு இல்லை என்றால் அந்த ஸ்ரீ காடிங் எம்பி சலுகைகள் குழு முன்பு நிறுத்தப்பட்டு அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
பிஎன் இந்தியர் வாக்குகளை மறந்து விடலாம். முகமட் அஜிஸ் போன்ற இனவாதிகள் அம்னோ முகங்களாகி விட்டனர். மிதவாதிகள் அல்ல.
உண்மையில் நம்மில் பலர் அம்னோ/பிஎன்-னை வெறுக்கத் தொடங்கியுள்ளோம். இது போன்ற கருத்துக்கள் அது சரி எனக் கட்டியம் கூறுகின்றன.
எச்பிலூய்: கடந்த 30 ஆண்டுகளாக அரசாங்கம் நடத்தி வருகின்ற போதனைகளின் விளைவே அது. இது தங்கள் நாடு என்பதே அம்னோ மலாய்க்காரர்களுடைய சிந்தனை. மற்ற அனைவரும் தங்கள் கீழ்ப்படிந்தவர்கள். சட்டப்பூர்வமான எதனையும் கொண்டு வரும் மலாய்க்காரர் அல்லாதார் இசா சட்டத்தைக் காட்டி (அவர்களுடைய சொந்தப் பாதுகாப்புக்காக) மருட்டப்படுகின்றனர். தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. அடிபணியுமாறு நெருக்கப்படுகின்றனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்படுகின்றனர்.
கைரோஸ்: பிஎன்-னைப் பிரதிநிதிக்கும் தரம் குறைந்த எம்பி-க்களுக்கு முகமட் அஜிஸ் நல்ல உதாரணம். அவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை. அறிவுப்பூர்வமாகவும் பேச மாட்டார்கள். எது சரி எது தவறு என்பதை அலசி ஆராயாமல் கட்சி விரும்புவதைக் கிளிப்பிள்ளை போல் ஒப்புவிப்பது தான் அவர்கள் வேலை.
அம்பிகாவைத் தூக்கில் போடுங்கள் போன்ற மடத்தனமான அறிக்கைகள் உண்மையில் வெறுப்பைத் தருகின்றன. நல்ல சிந்தனை உடைய மலேசியர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். இது போன்ற எம்பி-க்கள் குப்பைக் கூடைகளுக்குத் தான் லாயக்கு.
விஜார்ஜ்மை: ஏன் பேசிக் கொண்டே இருக்கின்றீகள். அம்பிகாவைத் துக்கில் போட நடவடிக்கைகளை எடுங்கள். 13வது பொதுத் தேர்தலில் அம்னோ வீழ்ச்சிக்கு உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் ஒரு காரணமாக இருப்பீர்கள்.
நெவர்சேடை: முகமட் அஜிஸுக்கு அம்னோ பச்சைக் கொடி காட்டியிருக்கா விட்டால் இன்னொரு நபர் மீது அதுவும் இன்னொரு இனத்தைச் சேர்ந்தவர் மீது இந்த இடத்தில் இந்தியர் மீது அத்தகைய தேச நிந்தனைக் கருத்துக்களை அவர் சொல்லியிருப்பாரா ?
அவர் அம்னோ எம்பி என்பதால் அவர் நிச்சயம் அம்னோ எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும்.
இன்னொரு மனிதரைத் தூக்கில் போட வேண்டும் என மருட்டுவது அம்னோ கலாச்சாரம் அல்ல எனத் தயவு செய்து பொய் சொல்ல வேண்டாம்.
அபாஸிர்: அந்த கொலைவெறிக் கருத்துக்கள் அம்னோ, நஜிப் தூண்டுதலால வெளியிடப்பட்டுள்ளன. அம்னோ எம்பி-க்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆழ்ந்த மௌனமும் நமக்கு உண்மையை உணர்த்துகின்றன.
ஆனால் இந்த விவகாரத்தில் நன்மை விளைந்துள்ளது. எல்லா நியாயமான மலேசியர்களுடைய வாக்குகளும் பக்காத்தான் ராக்யாட்டுக்குச் செல்லும். கைகளை முத்தமிடும் மஇகா தலைவர் போன்றவர்கள் தங்கள் வைப்புத் தொகைகளை இழப்பார்கள்.
லூயிஸ்: “இந்த நாட்டுக்காக இரத்தம் சிந்தத் தயாராக இருப்பதாக அந்த அம்னோ எம்பி சொன்ன போது அவரது பின்னிருக்கை ஆதரவு எம்பி-க்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.”
கொம்பாஸ்: அது பிஎன் நிலைப்பாடு இல்லையா ? பெர்சே 3.0ன் போது தடைகளை மீறுவதும் அம்பிகாவின் நிலை அல்ல. அவர் மீது ஏன் வழக்குப் போட வேண்டும் ?
அப்படி என்றால் அது அம்பிகா மீது தொடுக்கப்பட்டுள்ள இனவாத ஒடுக்குமுறை தானே ?