‘அம்பிகாவை தூக்கிலிடுங்கள்’ என ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் கூறியதை விவரமாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்களை டிஏபி தலைவர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டதத் தொடர்ந்து அந்தச் சர்ச்சை விரிவடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த அம்னோ அரசியல்வாதியை பலர் மீண்டும் கண்டித்துள்ளனர்.
அந்தக் குறிப்புக்களில் ஒரு பக்கத்தின் கேமிரா பிரதியை ராசா எம்பி அந்தோனி லோக் இணையத்தில் முதலில் சேர்த்தார். அதனை உடனடியாக 400 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அடுத்து இணையப் பயனாளிகளிடையே அந்த விவகாரம் மீது மீண்டும் விவாதம் தொடங்கியது.
“pendatang asing” (அந்நியக் குடியேறிகள்), “awang hitam” (ஆப்பிரிக்கர்களையும் கறுப்பு நிறக் குடியேற்றக்காரர்களையும் குறிக்கும் சொல்) ஆகியோர் நமது நாட்டில் கலவரம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என முகமட் அஜிஸ் அறிவுரை கூறியுள்ளது, இணையப் பயனாளிகளின் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் பெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்தியதற்காக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசிய பின்னர் மேலே கூறப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லோக் இணையத்தில் சேர்த்த கேமிரா பிரதியை பினாங்கு டிஏபி எடுத்து தனது முகநூல் பக்கத்தில் இணைத்தது. அதே நேரத்தில் ” pendatang asing, ‘awang hitam” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது ஏன் ?” அது கேள்வி எழுப்பியது.
அதற்கு உடனடியாக பதில் அளித்த டிஏபி தொடர்புடைய இணையப் பயனாளிகள், அம்பிகாவையே முகமட் அஜிஸ் ‘pendatang asing, ‘awang hitam’ எனக் குறிப்பிடுகிறார் என வெளிப்படையாகக் குற்றம் சாட்டினர்.
ஒர் இணையப் பயனாளி விளக்கமளித்தார்
உண்மையில் அந்தக் குறிப்புக்கள் முகமட் அஜிஸின் உரையாகப் பிரதிநிதிக்கிறதா என சில இணையப் பயனாளிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் உண்மையில் அவர் ‘pendatang asing, ‘awang hitam’ என அம்பிகாவைத் தான் குறிப்பிடுகிறாரா என்றும் வினவினர்.
“அவர் சொன்னதின் அர்த்தம் என்ன என்பதை விளக்க முடியாது. காரணம் அது உரையாடலின் ஒரு பகுதி,” என ஒருவர் கூறினார்.
நியாய சிந்தனையைக் கொண்ட இன்னொரு இணையப் பயனாளி நாடாளுமன்றக் விவாதக் குறிப்புக்களை முழுமையாக அணுகி எம்பி-யின் உரையை வாசித்துள்ளார்.
அவருடைய முடிவு இது தான்:
ஸ்ரீ காடிங்-கின் உரை எப்படித் தொடங்கியது என்பதை அந்தப் பகுதி காட்டவில்லை. அந்த உரை குடிநுழைவு (gejala pendatang asing) பற்றியும் எப்படி அந்நியர்கள் இங்கு குடியேறினார்கள் என்பது பற்றியும் எப்படி அவர்கள் நமது ‘hak keistimewaan’ (சிறப்புரிமைகள்)களைத் திருடினார்கள் என்பது பற்றியும் கவனம் செலுத்தியது.
“அடுத்து அவர் பெர்சே-யில் அரசதந்திரிகள் பங்கு கொண்டது பற்றிப் பேசினார் ( அதனை அவர் rusuhan அல்லது கலவரம் எனக் குறிப்பிட்டார்). பெர்சே-க்கு நிதி கிடைக்க அந்த அரசதந்திரிகள் உதவினார்களா என அவர் அடுத்து வினவினார். அந்நியர்கள் நமது உள் விவகாரங்களில்
தலையிடுவதற்கு நமது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் உதவுவதாக அவர் அம்பிகா மீது குற்றம் சாட்டினார்.”
“அவருடைய முழு உரையையும் பார்த்தால் (அந்த பகுதி அல்ல) அந்நியர்கள் இந்த நாட்டுக்கு வந்து கலவரத்தை ஏற்படுத்துவதையே அவர் கண்டித்துள்ளது தெரிகிறது. சாலை ஆர்ப்பாட்டங்களுக்குப் பணம் கொடுப்பதின் மூலம் அந்நிய அரசுகள் ( அவரது எண்ணம்) நமது உள் விவகாரங்களில் தலையிடுவதாக அவர் குறிப்பிட்டார். அவர் அம்பிகாவை pendatang எனச் சொல்லவில்லை.
நாட்டை விட்டு வெளியேறுமாறு தியான் சுவா-வுக்கு ஆலோசனை
சர்ச்சைக்குரிய அந்த தினத்தில் நிகழ்ந்த விவாதங்களின் முழுக் குறிப்புக்களையும் மலேசியாகினி பதிவிறக்கம் செய்தது. உண்மையில் அந்த பிஎன் எம்பி-யின் உரை அந்நியக் குடியேற்றக்காரர்களைச் சார்ந்திருந்தது. குற்றச் செயல்கள் கூடியுள்ளதற்கு அவர்களே காரணம் என்றும் அவர் கூறிக் கொண்டார்.
குறிப்பாக முகமட் அஜிஸ் வங்காள தேச குடியேற்றக்காரர்களைச் சாடினார். ஏப்ரல் 28ல் நிகழ்ந்த தேர்தல் சீர்திருத்தப் போராட்ட பேரணியின் போது சிங்கப்பூர், ஆஸ்திரேலிய அரசதந்திரிகள் நமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
முகமட் அஜிஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தான அம்பிகா தூக்கிலிடப்பட வேண்டுமா என்பது அவரது வாதத்தின் ஒரு பகுதியாக இருந்தது. என்றாலும் அவரது உரையில் பெரும்பகுதி குடியேற்றக்காரர்கள் பற்றியதாக இருந்தது. ‘pendatang asing’, ‘awang hitam’ ஆகியவை மீதான அவரது கருத்துக்கள் அதன் தொடர்பில் இணைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற முழு விவாதக் குறிப்புக்களையும் படிக்காமல் அம்பிகாவை அந்நியர் என்றும் கறுப்பு நிறத்தவர் என முகமட் அஜிஸ் குற்றம் சாட்டியுள்ளார் என்ற முடிவுக்கு பெரும்பாலான இணையப் பயனாளிகள் வந்து விட்டனர்.
எது எப்படி இருந்தாலும் முகமட் அஜிஸ் மீது தொடர்ந்து கண்டனக் கனைகள் தொடுக்கப்படுகின்றன. குடியேற்றக்காரர்களை அவர் கடுமையாக குறை கூறினாலும் தமது இன வெறிக் கருத்துக்கள் வழி அவர் இந்திய வம்சாவளி மலேசியர்களை அவமானப்படுத்தியுள்ளார் என இணையப் பயனாளிகள் கூறிக் கொண்டுள்ளனர்.
ஆனால் அன்றைய தினம் முகமட் அஜிஸ் மட்டும் இன வெறிக் கருத்துக்களை வெளியிடவில்லை.
இந்த நாடு மலேசியக் குடிமக்களுக்கு இனிமேலும் பாதுகாப்பானதாக இல்லை என பத்து எம்பி தியான் சுவா கருதினால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என லிப்பிஸ் எம்பி முகமட் ஷாரும் ஒஸ்மானும் சிலாம் எம்பி சாலே கால்பி-யும் மக்களவை விவாதம் காரசாரமாக நடைபெற்ற போது ஆலோசனை கூறினார்கள்.