ஸ்ரீ காடிங் கருத்து இனவாதத்திற்கு தெளிவான எடுத்துக்காட்டு

நான் வியப்படையவும் இல்லை, அதிர்ச்சி அடையவும் இல்லை. இது போன்ற அருவருப்பான சிந்தனையும் முழுக்க முழுக்க இனவாதப் போக்கும் அம்னோ அரசியல்வாதிகளுக்கு வழக்கமான நடைமுறையாகி விட்டது.

‘அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்’ என்ற அறைகூவல் தொடர்பில் எம்பி மீது போலீசில் புகார்

அடையாளம் இல்லாதவன் #58437020: பெர்சே ஒருங்கிணைப்பாளர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு  எதிரான கருத்துக்களை அவர்கள் எந்த அளவுக்கு சொல்கின்றனரோ அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கு உயரப் போகிறது. அவர் ஹீரோயினாகச் சித்தரிக்கப்படுவார்.

55 ஆண்டுகளுக்கு பின்னர் நாம் சரியான மலேசிய தயாரிப்பை பெற்றுள்ளோம். இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என நாம் விரும்புகின்ற அனைத்தையும் அம்பிகா பிரதிநிதிக்கிறார்.

இனச் சம நிலை, பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம். உங்கள் நம்பிக்கைகாக போராடுங்கள்.  தேர்தலில் நேர்மை வேண்டும்.

அம்பிகா அவர்களே மலேசியர்களாகிய நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம். மொத்தம் 28 மில்லியன் மக்கள்.

ஒடின்: அம்பிகா செய்த குற்றம் தான் என்ன ? அதுவும் தூக்கிலிடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவதற்கு ?

குற்றம் இல்லை என்றால் ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் மலிவாக விளம்பரம் தேடும் இன வெறியர் ஆவார். அவரைச் சுற்றியுள்ள, பண்புகள் குறைந்த மக்களுக்கு வெளியில் அவரை அறியச் செய்வதற்கு பொருத்தமான ஆற்றல் ஏதும் அவரிடம் இல்லை.

ஜெரார்ட் லூர்துசாமி: அந்த ஸ்ரீ காடிங் எம்பி-யின் தலைக்குள் யாராவது துப்பாக்கி ரவையை வைக்க வேண்டுமோ என்னவோ. அதனை அம்னோ ஏற்றுக் கொள்ளுமா ?

அந்த ஸ்ரீ காடிங் இனவாதியின் கிரிமினல், தேச நிந்தனைக் கருத்துக்களை தமிழ் நாளேடுகள் வெளியிடும் என்பதால் பிஎன் இந்தியர் வாக்குகளுக்குப் பிரியாவிடை கொடுத்து விடலாம்.

அவரும் அம்னோ தலைவர் என்ற முறையில் பிரதமரும் முழுமையாக மன்னிப்புக் கேட்காத வரையில் நஜிப் தமது ‘நம்பிக்கை’ என்ற சொல்லை மூட்டை கட்டி வைத்து விட வேண்டும் என இந்தியர்கள் சொல்ல வேண்டும்.

மற்ற நாடுகளாக இருந்தால் இன்னேரம் அந்த எம்பி சலுகைகள் குழுவுக்கு முன்னர் நிறுத்தப்பட்டு அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பார். அடுத்து நமது சட்டத்துறைப் பெருந்தலைவரும் போலீசாரும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஸ்ரீ காடிங் போன்ற மக்கள் நம்மைச் சுற்றி இருக்கும் போது நாடு சீரழிவதில் வியப்பில்லை.

சின்ன அரக்கன்: அம்பிகாவைத் தூக்குமேடைக்கு அனுப்பி விட்டால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து விடும் என அம்னோ எண்ணுகிறது. ஆனால் அம்பிகா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அம்னோ/பிஎன் வரலாறு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

நான் வியப்படையவும் இல்லை, அதிர்ச்சி அடையவும் இல்லை. இது போன்ற அருவருப்பான சிந்தனையும் முழுக்க முழுக்க இனவாதப் போக்கும் அம்னோ அரசியல்வாதிகளுக்கு வழக்கமான நடைமுறையாகி விட்டது.

அம்னோ தனது தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியாக் கோட்பாட்டை ஒரு போதும் ஒப்புக் கொண்டதும் இல்லை. ஏற்றுக் கொண்டதும் இல்லை.

அம்னோ அரசியல்வாதிகள் தங்கள் “உண்மையான நிறத்தை” வெளிப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால் பிஎன் தனது புதை குழிக்குள் செல்வது விரைவடையும். அதன் வழி இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் இருண்ட பகுதி முடிவுக்கு வரும்.

தூய்மையான நியாமான தேர்தல்களைக் கோரி ஒரு பேரணியை நடத்தியதற்காக ‘துரோகி’ என யாரும் உலகில் வேறு எங்கும் குற்றம் சாட்டப்படவே இல்லை. பெர்சே இயக்கத்த்தின் நோக்கம் நேரடியானது. வெளிப்படையானது.

பிஎன் -னில் உள்ள இந்தியப் பிரதிநிதிகளிடம் கௌரவம் இன்னும் ஏதும் மிஞ்சியிருந்தால் அவர்கள் துணிச்சலாக முழுமையாக பதவி துறந்து அம்பிகாவுடன் இணைந்து இந்த நாட்டை இனவாத அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

TAGS: