ஜொகூரில் அனைத்து இனங்களுக்கும் ஹூடுட் சட்டம், அம்னோ சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார்

ஜொகூரில் அனைத்து இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் கூறுகிறார்.

“உண்மையான ஹூடுட் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக ஜொகூர் இருப்பதைக் காண தாம் விரும்புவதாக மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அயுப் கூறினார். அது பாஸ் கூறும் சமயச் சட்டத்திற்கு மாறுபட்டதாகும் என்றாரவர்.

கிளந்தானில் பாஸ் இயற்றியுள்ள ஹூடுட் சட்டத்திற்கும் இதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இங்கு அச்சட்டம் மாநிலத்திலுள்ள அனைத்து இனங்களையும் உள்ளடக்கும் என்று அயுப் கூறினார்.

கிளந்தான் மாநிலம் இயற்றியுள்ள “ஷரியா கிரிமினல் கோட் (II) 1993 இஸ்லாத்தின் உண்மையான தேவையைப் பிரதிபலிக்கவில்லை. அமல்படுத்தப்படுவதில் அது (முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையில்) வேறுபாட்டை உருவாக்குகிறது”, என்று அயுப் கூறினார்.