டாக்டர் மகாதீர் பிரதமர் பொறுப்பை ‘ஏற்றுக் கொண்டாரா’ ?

“இந்த நாட்டின் தலைவர் யார் ? மகாதீரா அல்லது நஜிப்பா ? இந்த நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என்பது மீது அண்மைய காலமாக மகாதீர் உரைகளை நிகழ்த்துவதை நாம் பார்க்கிறோம்.”

சிறுபான்மையினர் ஆட்சியைக் கைப்பற்ற முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார்

நீதிபதி நவின் சி நாயுடு: டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, வானாளவிய கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் விரிவாக்கம், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மிகப் பெரிய கொடிகள், புரவலர் சர்வாதிகாரம், நெடுஞ்சாலைகள், பில்லியன் ரிங்கிட் பெறும் ஒப்பந்தங்கள் ஆகியவை தோல்வி கண்ட நாட்டுக்கு வழி வகுக்கின்றன.

உங்கள் ‘தலைமைத்துவம்’ முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உங்கள் குளறுபடிகளை பட்டியல் போடலாம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் எல்லாம் அம்பலமாகும்.

மோசமான குற்றங்களுக்கும் தேச நிந்தனைக்கும் உங்கள் மீது குற்றம் சாட்டுவது மட்டும் போதாது. அகோங்-கின் பிரஜைகளிடையே நீங்கள் அதிருப்தியை உருவாக்கினீர்கள்.

நான் நாட்டை விட்டு வெளியேறியதற்கு நீங்களே காரணம். நீதித் துறையில் தலையிட்டு அதனை நீங்கள் குழப்பிய பின்னர் நான் வெளியேறினேன்.

என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலம் பற்றியும் தங்கள் குடும்பங்கள் பற்றியும் அச்சமடைந்திருந்தனர்.

நான் என் குடும்பத்தை அழைத்துக் கொண்டு 23  ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள சியாட்டாலுக்கு குடியேறினேன்.

அடையாளம் இல்லாதவன் #32993250: மகாதீர் அவர்களே, அடுத்த பொதுத் தேர்தலில் சிறிய பெரும்பான்மையுடன் பக்காத்தான் ராக்யாட் ஆட்சியைப் பிடிக்கும் என நீங்கள் அச்சமடைந்துள்ளீர்கள் உங்கள் அறிக்கையில் அது தெளிவாகத் தெரிகிறது. அதனால் திருநங்கை விவகாரம் மீது பழி போட்டுள்ளீர்கள். திருநங்கை சமூகம் பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகின்றது.

நீங்கள் மருத்துவர். அத்தகைய மக்கள் ஏன் உருவாகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சிகளில் விசித்திரமான மக்கள் உள்ளனர் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துவதே உங்கள் நோக்கம். இந்த நாட்டின் செல்வத்தை சூறையாடுவதற்கு அம்னோ அரசியல்வாதிகளை இறைவன் தேர்வு செய்துள்ளார்.

அடையாளம் இல்லாதவன்_3e21: இந்த நாட்டின் தலைவர் யார் ? மகாதீரா அல்லது நஜிப்பா ? இந்த நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என்பது மீது அண்மைய காலமாக மகாதீர் உரைகளை நிகழ்த்துவதை நாம் பார்க்கிறோம்.

அவர் மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கு இது அறிகுறியா ? நஜிப் பலமிழந்து விட்டாரா ?

சின்ன அரக்கன்: ‘சிறுபான்மையினர்’ ஆட்சியைக் கைப்பற்ற விரும்பவில்லை. ‘பெரும்பான்மையினர்’ அதிகார வெறியுடன் அலையக் கூடாது என்று தான் அவர்கள் விரும்புகின்றனர்.

இந்த நாட்டைச் சூறையாடுவதை பெரும்பான்மையோர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிறுபான்மையோர் விரும்புகின்றனர். இனவாத அரசியல்வாதிகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற சிறுபான்மையோர் விரும்புகின்றனர்.

சிவில் உரிமைகள் அவற்றின் உண்மையான வடிவத்தில் இருக்க வேண்டும் என சிறுபான்மையோர் விரும்புகின்றனர். அவற்றை பெரும்பான்மையோர் மதிக்க வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகின்றனர்.

நாட்டின் நீதித் துறை தனது கௌரவத்தையும் சுதந்திரத்தையும் மீண்டும் பெற வேண்டும் என்றும் ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சிறுபான்மையோர் விரும்புகின்றனர்.
 
பெரும்பான்மை மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ நியாயமான சுதந்திரமான தேர்தல்களுக்கு சிறுபான்மையோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிறுபான்மையோர் பெரும்பான்மை மக்களுக்காக போராடுகின்றனர். சிறுபான்மையோர் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையைக் கொண்டிருக்கவில்லை.

அஸ்தமனம்: பெர்சே விடுத்துள்ள எட்டுக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு தூய்மையான, நியாயமான தேர்தல்களை நடத்துங்கள் உண்மையான பெரும்பான்மை அரசாங்கம் உதயமாகும்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் காலமானவர்கள் பெயர்கள் இருப்பது உட்பட எல்லா வகையான குளறுபடிகளையும் அனுமதிக்கும் பார்வையற்ற தேர்தல் ஆணையம் இருப்பதால் தான் ஊழல் மலிந்த குழப்படியான அரசாங்கம் ஆட்சி புரிகிறது.

TAGS: