சொய் லெக்: அதனை நான் துணிச்சலாக ஒப்புக் கொண்டேன்

தமது கடந்த காலச் செய்கையை தாம் துணிச்சலுடன் ஒப்புக் கொண்டதாக மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார்.

அவ்வாறு செய்யும் ஆற்றல் தமது எதிரியான லிம் குவான் எங்-கிற்கு இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.

“என்னைப் போன்று தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு அமைச்சர் பதவியையும் கட்சிப் பதவிகளையும் நான் துறந்தது போன்று செய்வதற்கு லிம் குவான் எங்-கிற்குத் துணிச்சல் இருக்குமா ?” என சுவா வினவினார்.

தமது முன்னாள் ஊழியர் ஒருவருடன் உறவுகளை வைத்திருப்பதாக கூறப்படுவதை மறுத்து லிம் நிருபர்களிடம் பேசிய சில மணி நேரத்தில் சுவா-வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டை மலாக்கா மாநில மசீச தலைவர் கான் தியான் லூ மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தின் போது சுமத்தினார்.

அந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக வெளியிடுமாறும் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் கான் -க்கு சவால்  விடுத்தார். அவ்வாறு கான் வெளியிட்டால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடருவதற்கு உதவியாக இருக்கும் என்றும் லிம் குறிப்பிட்டார்.

“மசீச பொய் சொல்வதை நானும் என் மனைவியும் நீதிமன்றத்தில் நிரூபிக்க அனுமதியுங்கள். லிம் குவான் எங், மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் போன்றவரல்ல,” என லிம் கூறினார்.

 

TAGS: