உங்கள் கருத்து: “கைரி, அம்னோ இளைஞர் தேர்தலில் வென்றார், அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. மகாதிரின் மைந்தர் தோற்றார்,துணை அமைச்சர் ஆனார்.”
என்னை ஏன் இவ்வளவு வெறுக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை
கவனிப்பாளன்: உண்மை தெரிந்தால் எல்லா மலேசியர்களும், குறிப்பாக ஏழைகளும் குறைந்த நடுத்தர வகுப்பினரும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை வெறுக்கத்தான் செய்வார்கள்.
ஏனென்றால், அவரும் அவருக்கு வேண்டியவர்களும், அவருக்குப்பின் பதவிக்கு வந்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்போரும் மக்களின் பணத்தை பில்லியன் கணக்கில்(ஆண்டுக்கு 60பில்லியன் என்பது நடப்பு மதிப்பீடு)கொள்ளையிட்டிருக்கிறார்கள்.அதன் விளைவாக மக்களில் பலர் இன்னமும் வறுமைப்பிடியில் சிக்கியும் செலவுகளைச் சரிக்கட்ட முடியாமலும் தவிக்கின்றனர்.
மகாதிர், டிஎன்பி(தெனாகா நேசனல் பெர்ஹாட்) தலைவர் அனி அரோப்பைப் பதவியிலிருந்து தூக்கினார்-சுயேச்சை மின் உற்பத்தியாளருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் பயனீட்டாளர்களுக்கு சுமையாக இருக்கும் என்று எதிர்ப்புத் தெரிவித்ததற்காக.
மகாதிர் ஒய்டிஎல்-இன் பிரான்சிஸ் இயோவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்.அதனால் ஒய்டிஎல்லுக்கு 30விழுக்காடு ஆதாயம் கிடைத்தது.ஆனால், அதற்காக மலேசியர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு மலேசியரும் செலுத்தும் மிதமிஞ்சிய மின்கட்டணத்தால் மகாதிர், இயோ இருவருமே கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.
இப்போது சொல்லுங்கள், மின்சாரக் கட்டணம் கட்டுவதற்கு அல்லாடும் ஒவ்வொரு மலேசியருக்கும் மகாதிர்மீது வெறுப்பு வருமா, விருப்பு வருமா.சாலைக் கட்டணம்,அது இன்னொரு பகல் கொள்ளை.
டிமோதி: மகாதிரின் கட்டுப்பாட்டில் பிரதமர் நஜிப் ரசாக் இல்லையா? ஓர் எடுத்துக்காட்டு-கைரி ஜமாலுடின் அம்னோ இளைஞர் தேர்தலில் வென்றார்.அவருக்கு அமைச்சர் பதவி இல்லை.மகாதிரின் மைந்தர் தோற்றார்.அவருக்குத் துணை அமைச்சர் பதவி.
மகாதிர் அவர்களே இதற்கு நஜிப் காரணமா, நீங்கள் காரணமா?உண்மையில் மகாதிர்தான் அம்னோவின் ‘கிங்மேக்கர்’.அவர்தான் அப்துல்லாவை விரட்டி அடித்து நஜிப்பை அம்னோ தலைவராகவும் பிரதமராகவும் ஆக்கியவர்.
அபாசிர்: இனவாதி பேசுவதைப் பார்த்தீர்களா.வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள் சீனர்களாம்.சீன அரசியல்வாதி அவர்மீது வெறுப்பை உண்டுபண்ண முயல்கிறாராம்.
இப்படியெல்லாம் சொல்லி, சீனர்களை வைத்துப் பூச்சாண்டி காண்பிக்கிறார் இந்த மூத்த அரசியல்வாதி…….இது தகவலறியாத, விவரமறியாத மலாய்க்காரர்களை அம்னோ பக்கமாக கவர்ந்திழுக்கும் தந்திரம்.
விளையாட்டு வேண்டாம்: துன் எம் அவர்களே, நீங்கள், உங்களின் 22ஆண்டுக்கால ஆட்சியில் மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தீர்கள் அல்லவா, அதற்காகத்தான் மாற்றுக்கட்சியினர் உங்களை வெறுக்கின்றனர்.
மெகா திட்டங்களால் மக்கள் எவ்வளவு வசதியாக வாழ்கிறார்கள்.பினாங்கு பாலம்,“அந்தக் கீழைநாட்டு முத்து” மங்காமல் பிரகாசிக்க வைத்தது.கேஎல்ஐஏ(கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம்) பறப்பதற்கு வசதி செய்து தந்தது.
நெடுஞ்சாலைகள் இருப்பதால் டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்கும் அவரும் குடும்பத்தினரும் சீனப் புத்தாண்டு விருந்தில் ஒன்றுகூட வசதியாக இருக்கிறது.
ஆக, எனக்கும் புரிகிறது, அவர் ஏன் உங்களை இவ்வளவு வெறுக்கிறார் என்பது.
கொம்பாஸ்:மக்களைக் காலவரையின்றி தடுத்து வைப்பது, துணைப் பிரதமரைக் கைது செய்து அடித்து நொறுக்குவது பிறகு இவற்றையெல்லாம் நாட்டுக்காகத்தான் செய்தேன் என்பது-இந்தக் கதையெல்லாம் எடுபடாது.
பல்லினவாதி: மலேசியர்கள் 2008-இல் பிஎன்னுக்கு எதிராக வாக்களித்தனர்.பிஎன்னில் இருந்த ஊழலின் காரணமாக, இனவாதம் காரணமாக அப்படிச் செய்தார்கள்.
அப்துல்லா நிர்வாகம் மகாதிரை மரியாதைக்குறைவாக நடத்தியதால் மகாதிருக்கு ஆதரவாகத்தான் அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்பது சரியல்ல.எங்களைப் பொறுத்தவரை அப்துல்லா, மகாதிர், நஜிப் ரசாக் எல்லாருமே ஒன்றுதான்.எல்லாருமே இனவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
அப்துல்லாவையும் நஜிப்பையும் பொறுக்கியெடுத்தவரே மகாதிர்தானே.அதனால் அவர்கள் உருப்படாதவர்கள் என்றால் உருப்படாதவர்களைத் தம் வாரிசுகளாகத் தேர்ந்தெடுத்த அவர்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
பிஎன், தொடர்ந்து ஆணவத்துடன் செயல்படுவதாலும் ஊழல் மேலும் மோசமாகி இருப்பதாலும் அடுத்த தேர்தலில் முன்னிலும் மோசமான தோல்வியைக் காணும்.
தலைவெட்டி:இப்போது மலேசியர்களில் பலர் அவரை மதிப்பதில்லை.எல்லாம் அவர் தாமே தேடிக்கொண்டது.
இன்று நாட்டில் நிலவும் பல சீர்கேடுகளுக்கும் காரணம் யார் என்று பார்த்தால் அது மகாதிராகத்தான் இருக்கும்.அவரின் கொள்கைகள் மாபெரும் ஊழல்களுக்கு வழிவகுத்தன.இன்றும் அது தொடர்கிறது.
நாட்டுக்கு அவர் நன்மைகள் செய்திருந்தாலும் அதையெல்லாம் மீறி ஊழல் தந்தை என்றுதான் வரலாறு அவரை நினைவுகூறும்.
பலரும் எடுத்துரைப்பதுபோல் அவர் அரசியலிலிருந்து முற்றாக ஒதுங்கிவிடுவதுதான் நல்லது.
வினோத்: நான் மகாதிர் ரசிகன் அல்ல.ஆனால், அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.அவருக்கு எதிராக குறை சொல்வதாக இருந்தால் சொல்லும் குறை உண்மையாக இருத்தல் வேண்டும்.உணர்ச்சி வசப்பட்டோ ஆத்திரப்பட்டோ பேசக்கூடாது.
பீரங்கி: சாபாவில் ‘புரோஜெக்ட் ஐசி’-இன்கீழ் பயனடைந்த கிட்ட ஒரு மில்லியன் பேர் வேண்டுமானால் மகாதிரை நன்றியுடன் நினைத்துப் பார்க்கலாம்.ஆனால், சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக்கப்பட்டவர்கள் அவரை வெறுக்கத்தான் செய்வார்கள்.