EC தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை தள்ளி வைத்துள்ளது

இசி என்ற தேர்தல் ஆணையம் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை இப்போது மேற்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளது.

தீபகற்ப மலேசியாவிலும் சபாவிலும் கடந்த தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையின் கால வரம்பு 2011ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி நிறைவுக்கு வந்து விட்டதால் புதிய தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என நிதித் துணை அமைச்சர் டாக்டர் அவாங் அடெக் ஹுசேன் கூறினார்.

“என்றாலும் தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது,” என தேவான் நெகாராவில் 2012ம் ஆண்டுக்கான துணை விநியோக மசோதா மீதான விவாதத்தை நிறைவு செய்து வைத்து பேசிய போது அவர் கூறினார்.

கூட்டரசு அரசமைப்பின் 13வது பட்டியலின் கீழ் தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவாங் அடெக் சொன்னார்.

“அந்த நடவடிக்கை சட்டத்திற்கு ஏற்ப நியாமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய கருத்துக்களை வழங்குவதில் எல்லாத் தரப்புக்களும் சம்பந்தப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

தேவான் நெகாரா மீண்டும் நாளை கூடும்.

பெர்னாமா

 

TAGS: