“துயரத்தை அனுபவிக்கும் சக மனிதருக்காக பேசும் உங்களைப் போன்ற ஒருவரைப் புதல்வராக பெற்றுள்ளதற்காக மலேசியா பெருமைப்பட வேண்டும்.”
மலேசிய இந்தியர்கள் அனுபவிக்கும் அநீதிகளை சரி செய்யுங்கள்
ஆர்ஆர்: நியாட் என்ற தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம் தெரிவித்துள்ள கருத்துக்கள் நியாயமானவை. மலேசியாவில் அவர் அனுபவித்த சிரமங்கள் துயரங்களின் விளைவாக அவர் இந்திய சமூகத்தின் மீது பற்றுக் கொண்டுள்ளார்.
ஒர் இந்திய முஸ்லிம் ( முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டைப் போல் இல்லாமல்) இந்தநாட்டில் இந்தியர்களில் பெரும்பான்மையாக இருக்கும் இந்திய இந்துக்களுக்காக ஏன் போராடுகிறார் என யாரும் கேள்வி எழுப்பக் கூடாது.
எல்லா இனங்களும் மலேசியர்கள் எண்ண வேண்டிய நேரம் வந்து விட்டது. வசதிகளையும் நன்மைகளையும் இழந்து வறுமையில் வாடும் பல இன மக்களுடைய பிரச்னைகளை தீர்ப்பதற்கு நாம் போராட வேண்டும்.
கொள்கைகள் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். அவை மனித நேயத்துடனும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். அதனைத் தான் தஸ்லீம் வலியுறுத்துகிறார்.
மாற்றம் நிகழும் போது பக்காத்தான் ராக்யாட் எல்லா இனங்களுக்கும் நியாயமாக நடந்து கொள்ளும் நான் நம்புகிறேன். இல்லை என்றால் நாம் 14வது பொதுத் தேர்தலில் பக்காத்தானை மாற்றி விடுவோம்.
கேஎஸ்என்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக மஇகா-வினாலும் அம்னோபாரு-வினாலும் ‘இழி நிலைக்கு’ கொண்டு செல்லப்பட்டு விட்ட இந்தியர்களுக்காக தஸ்லீம் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல மற்றவர்களுக்கு இணையாக அவர்களை உயர்த்துவதற்கும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரி செய்வதற்கும் வியூகத் திட்டம் அவசியமாகும்.
எடுத்துக்காட்டுக்கு தோட்டத் துண்டாடல், இணைப்பு ஆகியவற்றினால் இடம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெறவும் புதிய தொழில்களில் தேர்ச்சி பெறவும் வழியே இல்லை.
அவர்கள் அம்னோ பாரு அல்லது பக்காத்தான் கீழ் தொடர்ந்து அவதியுறுவதைத் தடுக்க அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.
தமிழ்ப் பள்ளிகள், இந்துக் கோயில் பிரச்னைகளை ஒதுக்கி விடுங்கள். புதிய அறிவாற்றலை தொழில் தேர்ச்சியைப் பெறுவதற்கு அவை உதவப் போவதில்லை.
பெர்ட் தான்: 80 விழுக்காடு மலேசிய இந்தியர்களாக இருக்கும் அரசாங்க நிதி உதவி பெற்ற தங்கும் வசதிகளைக் கொண்ட பள்ளிக்கூடங்கள் தேவை என தஸ்லீம் சொல்கிறார். “நீண்ட காலத்துக்கு இல்லை என்றாலும் குறைந்த பட்சம் அதனைத் தொடங்க வேண்டும்,” என்றார் அவர்.
அது நல்ல யோசனை. பக்காத்தான் இனவாதக் கட்சி என முத்திரை குத்தப்படாமல் தவிர்ப்பதற்கு சிறப்பு உதவியை வழங்குவதற்கு 10 ஆண்டு கால வரம்பை விதிக்கலாம்.
பெரிய நிறுவனங்கள் ஆர்ஜிதம் செய்து விட்டதால் தோட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்த பெரும்பாலான இந்தியர்களுக்கு போவதற்கு இடம் இல்லை. அவர்களுடைய கல்வித் தேர்ச்சியும் குறைவானது. பலரிடம் முறையான குடியுரிமை ஆவணங்களும் இல்லை. அதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதில் எந்த வியப்பும் இல்லை.
அந்த இந்திய இளைஞர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கும் கொள்கை நமக்குத் தேவை. தங்கும் வசதிகளைக் கொண்ட பள்ளிகள் பேருதவியாக இருக்கும். காரணம் அவர்களில் பெரும்பாலோர் பள்ளிக்கூடக் கட்டணங்களைக் கூட செலுத்த முடியாது.
சின்ன அரக்கன்: பக்காத்தான் ராக்யாட்டில் இணைவது இல்லை என்ற தஸ்லீம் முடிவை நான் பாராட்டுகிறேன். அவர் கட்சிச் சார்பற்ற நிலையில் தமது சமூகப் பணிகளைத் தொடர வேண்டும்.
மலேசிய இந்திய சமூகத்துக்கு உதவிய செய்ய ஆதரவுக் கொள்கைகள் அவசியம் என தஸ்லீம் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய சமூகம் கடந்த நான்கு தசாப்தங்களாக பிஎன் தலைவர்களுடைய அனுதாபத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்கு நீண்ட காலத் தீர்வுகளை வழங்கும் ஆற்றல் தனக்கு இருப்பதை பக்காத்தான் இன்னும் நிரூபிக்கவில்லை.
ஆதரவுக் கொள்கைகள் பிரச்னைகளையும் தற்காலிகத் தீர்வுகளையுமே வலியுறுத்துகின்றன. அவை இந்திய சமூகத்தை சமூக நோய்களிலிருந்து மீட்க மாட்டா.
இன, சமயத் தடைகளை உடைத்து மலேசிய இந்தியர்களை மரியாதையுடனும் கௌரவத்துடனும் ஏற்றுக் கொள்வதற்கான துணிச்சல் பிஎன் -னில் உள்ள அம்னோ தலைவர்களுக்கும் பக்காத்தான் மலாய் தலைவர்களுக்கும் வர வேண்டும்.
அது வரையில் மலேசிய இந்தியர்களுக்கு உதவும் எந்த ஆதரவுக் கொள்கையும் குப்பைத் தொட்டிக்குத் தான் போகும்.
மலேசியன் பறையா: மலேசிய இந்தியர்களுக்கு ஆதரவு நடவடிக்கைகள் தேவை இல்லை. வாய்ப்புக்களை நியாயமாக அமலாக்கினால் போதும்.
இதுகாறும் மஇகா/பிஎன் தோல்வி கண்டுள்ளது. பக்காத்தானுக்கு வாய்ப்புக் கொடுப்போம். அந்தமுயற்சியில் ஒருங்கிணைவோம்.
ஹோல்டன்: துயரத்தை அனுபவிக்கும் சக மனிதருக்காக இன வெறியோ பேராசையோ இல்லாமல் பேசும் உங்களைப் போன்ற ஒருவரைப் புதல்வராக பெற்றுள்ளதற்காக மலேசியா பெருமைப்பட வேண்டும்.
தஸ்லீம் நீங்கள் எல்லா மலேசியர்களுக்கும் எல்லா மனிதர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.